பாரதியார் கவிதை விருது

பாரதியார் கவிதை விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும்.[1][2] கவிதையை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள்

ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 --- --- --- தேர்வு செய்யப்படவில்லை
2013 பெரு நயப்புரைத்தல் முனைவர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம்
2015 இன்குலாப்
2016 மலர்மகன் கவிதைகள் மலர்மகன்[3]

மேற்கோள்கள்

  1. "ரூ.22 லட்சம் மதிப்பில் தமிழ்ப்பேராய விருதுகள் : எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2016-05-27. Retrieved 2025-02-10.
  2. "எஸ்ஆர்எம் பல்கலை. தமிழ்ப்பேராய விருதுகள் : தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் 10 பேருக்கு ரூ.19 லட்சம் பரிசு". Hindu Tamil Thisai. 2015-07-28. Retrieved 2025-02-10.
  3. "இமையம், கு.கணேசன், ஈரோடு தமிழன்பன், சிலம்பொலி செல்லப்பன் உட்பட 13 பேருக்கு தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2017-01-08. Retrieved 2025-02-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya