பாரத் மண்டபம்
பாரத் மண்டபம் (Bharat Mandapam), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ளது. இந்திய அரசின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் 150 ஏக்கர் பரப்பளவில் ஓவல் வடிவில் நிறுவப்பட்ட பாரத் மண்டப வளாகம், பன்னாட்டு வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு வர்த்தக மாநாடுகள் நடத்துவதற்கு கட்டப்பட்டது.[2][3] ஐந்து நிரந்தர கண்காட்சி அரங்குகள் மற்றும் எந்த வகையான கண்காட்சிக்கும் ஏற்ற கட்டிடங்கள் உள்ளன. நேரு பெவிலியன், அணுசக்தி பெவிலியன் மற்றும் பாதுகாப்பு பெவிலியன் ஆகியவை இங்கு நிரந்தரமாக அமைந்துள்ள அரங்குகளில் அடங்கும். பாரத் மண்டப வளாகத்தில் 4.2 மில்லியன் சதுர அடி பரப்பில் உலகத் தாரம் வாய்ந்த மாநாட்டு மையத்தில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 1.5 இலட்சம் சதுர அடியில் 6 கண்காட்சி மண்டபங்கள், கீழ் தளங்களில் வாகனங்கள் நிறுத்தங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டிற்கான ஜி20 உச்சிமாநாடு 9-10 செப்டம்பர் 2023 நாட்களில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு நிகழ்ச்சி ஆகும்.[4] போக்குவரத்து வசதிகள்இம் மண்டபம் ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தில்லி மெட்ரோ மூலம் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் இறங்கி, பாரத் மண்டபத்தை அடையலாம். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia