பார்பாரா இலிசுகோவ்
பார்பாரா இலிசுகோவ் (Barbara Liskov, பிறப்பு: நவம்பர் 7, 1939) அல்லது (பார்பாரா ஜேன் கூபர்மன் (Barbara Jane Huberman)) ஓர் அமெரிக்கக் கணினி அறிவியலாளர் ஆவார்.[2] இவர் மசாசூசட் நிறுவனப் பேராசிரிய பட்டியலில் உள்ளார். மேலும், இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனப் பொறியியல் பள்ளியின் மின்பொறியியல், கணினி அற்வியல் துறைசார் போர்டு பேராசிரியரும் ஆவார்.[3] வாழ்க்கையும் பணியும்தகைமைகளும் விருதுகளும்இவர் தேசியப் பொறியியல் கல்விக்கழகம், தேசிய அறிவியல் கல்விக்கழகம், ஆக்கியவற்றின் உறுப்பினரும் அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழகம், கணிப்பெந்திரக் கழகம் ஆகியவற்றின் ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் 2002 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் மிகச் சிறந்த பெண் புல உறுப்பினராக்க் கருதப்பட்டார். மேலும். அமெரிக்க அறிவியலாளர்களில் மிகச் சிறந்த 50 பேரில் ஒருவராக்க் கருதப்பட்டார்.[4] இவர் 2004 இல் "நிரலாக்க மொழி, நிரலாக்க முறையியல், பரவல்நிலை அமைப்புகள்" ஆகியவற்றுக்கான பங்களிப்புகளுக்காக ஜான் வான் நியூமன் பதக்கத்தைப் பெற்றார்.[5] 2005 நவம்பர் 19 இல் இவரும் டொனால்டு ஈ. நூத்தும் ETH தகைமை முனைவர்கள் பட்டம் வழங்கப்பட்டனர்.[6] இவரும் நூத்தும் ETH சூரிச் தகைமை கருத்துரைத் தொடரில் தோன்றியுள்ளனர்.[7] இவர் 2008 ஆம் ஆண்டிற்கான டர்னிங் விருதை அமெரிக்கக் கணிப்பெந்திரக் கழகத்தில் இருந்து 2009 மார்ச்சில் பெற்றார்.[8] இது நிரலாக்க மொழி வடிவமைப்பு, பொருள்-சார் நிரலாக்கமுறை உருவாக்கத்துக்கு வழிவகுத்த மென்பொருளாக்க முறையியல் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டது.[9] குறிப்பாக இவர் இரண்டு நிரலாக்க மொழிகளை உருவாகினார். அவை CLU நிரலாக்க மொழி (1970 களில்),[10] ஆர்கசு நிரலாக்க மொழி[11] (1980 களில்) என்பனவாகும்.[9] அமெரிக்க கணிப்பெந்திரக் கழகம் The ACM cited her contributions to the practical and theoretical foundations of "நிரலாக்கமொழி, அமைப்பு வடிவமைப்பு ஆகியவற்றுக்கு நடைமுறை, கோட்பாட்டு அடிப்படைகளுக்கான பங்களிப்புகளை விதந்து கூறுகிறது. குறிப்பாக, தரவுகள் மீட்புச் சுருக்கம், பிழைப்பொறுதி, பரவியநிலைக் கணிப்பு ஆகியவற்றுக்கான பங்களிப்புகளைச் சிறப்பாக விதந்தோதுகிறது."[12] இவர் மூன்று நூல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia