பார்வைத் தொகுதிபார்வைத் தொகுதி (Visual system) என்பது மைய நரம்புத் தொகுதியின் ஒரு பகுதி. இது பார்வை சார்ந்த விபரங்களைப் பயன்படுத்தி உயிரினங்கள் பார்ப்பதற்கு உதவுவதுடன், படிமங்களை உருவாக்காத பிற ஒளித்தூண்டல் செயற்பாடுகள் நடைபெறுவதற்கும் துணை செய்கிறது. இத் தொகுதி, பார்க்கக்கூடிய ஒளியில் இருந்து தகவல்களைப் பெற்று சுற்றிலும் உள்ள உலகின் விம்பம் ஒன்றை உருவாக்கித் தருகிறது. பார்வைத்தொகுதி பல சிக்கலான செயற்பாடுகளைச் செய்கிறது. ஒளியைப் பெற்று ஒற்றைக்கண் விம்பங்களை உருவாக்குதல், இந்த இரு பரிமாணப் படிமங்களில் இருந்து இருகண் பார்வையை உருவாக்குதல், காணும் பொருட்களை அடையாளம் கண்டு வகைப்படுத்தல், பொருட்கள் இருக்கும் தூரத்தையும் வெவ்வேறு பொருட்களுக்கு இடையிலான தூரங்களையும் மதிப்பிடல், காணும் பொருட்களுக்குச் சார்பாக உடல் இயக்கங்களை வழிப்படுத்தல் என்பன அவற்றுள் அடங்குவன. பார்வைக்குரிய தகவல்களின் உடலியல் வெளிப்பாடே பார்வைப் புலன் எனப்படுகின்றது. இது இல்லாத நிலையே குருட்டுத் தன்மை ஆகும். பார்வைப் புலன் சாராத, விம்பங்களை உருவாக்காத பார்வைச் செயற்பாடுகளும் உள்ளன. விழிப்பாவை மறிவினை இவ்வாறான ஒரு செயற்பாடு ஆகும். அறிமுகம்![]() விழியின் ஒளியியல் காரணங்களால் விழித்திரையில் விழும் பிம்பம் தலைகீழாகவே உள்ளது. இந்தக் கட்டுரையில் பாலூட்டிகளின் பார்வைத்தொகுதியே பெரும்பாலும் விவரிக்கப்பட்டாலும் மற்ற "உயர்" விலங்குகளுக்கும் ஒப்பான பார்வைத்தொகுதிகள் உள்ளன. பார்வைத்தொகுதியில் உள்ளடங்கியவை:
வெவ்வேறு இனங்கள் மின்காந்த நிழற்பட்டையின் வெவ்வேறு பகுதிகளைக் காணக்கூடியனவாக உள்ளன; காட்டாக, அந்தோபிலாகள் புற ஊதாக் கதிர் ஒளியில் பார்க்கக் கூடியன.[1] அதே போல குழி விரியன்கள் அகச்சிவப்புக் கதிர்களை உணரக்கூடிய குழி உறுப்புக்களால் தங்கள் இரைகளை துல்லியமாக பிடிக்க இயலும்.[2] 2000 அடி ஆழத்தில் உள்ள இரைகளை கண்டுபிடிக்க வாள்மீன்களின் கண்கள் வெப்பத்தை வீசக் கூடியனவாக உள்ளன.[3] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia