பாலின சமத்துவமின்மைபாலின சமத்துவமின்மை (gender inequality) என்பது ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படாத சமூக செயல்முறையாகும். சமூகத்தில் நிலவும் உயிரியல், உளவியல் அல்லது கலாச்சார விதிமுறைகள் தொடர்பான வேறுபாடுகளிலிருந்து இது ஏற்படலாம். இந்த வேறுபாடுகளில் சில அனுபவ ரீதியாகவும் மற்றவை சமூக ரீதியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கல்வி, ஆயுட்காலம், ஆளுமை, ஆர்வங்கள், குடும்ப வாழ்க்கை, தொழில் மற்றும் அரசியல் சார்பு உட்பட பல துறைகளில்பாலின வேறுபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. பாலின வேறுபாடுகள்உயிரியல்உயிரியல் மற்றும் உடற்கூறியல் காரணிகளின் அடிப்படையில் பாலினங்களிடையே இயற்கையாகவே வேறுபாடுகள் உள்ளன, பெரும்பாலும் வேறுபட்ட இனப்பெருக்க அடிப்படையில் வேறுபாடு காணப்படுகிறது. உயிரியல் வேறுபாடுகளில் நிறப்புரி மற்றும் இயக்குநீர் வேறுபாடுகளும் அடங்கும். [1] உடல் வலிமைகளின் அடிப்படையிலும் (சராசரியாக) இயற்கையான பாலின வேறுபாடு உள்ளது. இருப்பினும் எந்தவொரு ஆணும் எந்த பெண்ணையும் விட வலிமையானவர் என்பது இதன் பொருள் அல்ல. [2] [3] பெண்களை விட ஆண்கள், சராசரியாக உயரமானவர்களாக உள்ளனர். இதில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது.[4] சராசரியாக, பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர், [5] இது எந்த அளவிற்கு உயிரியல் வேறுபாட்டினால் நிகழ்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆண்களுக்கு, பெண்களை விட,அளவில் நுரையீரல் பெரியதாகவும் அதிக அளவில் இரத்த அணுக்கள் மற்றும் உறைதல் காரணிகள் உள்ளன, அதே சமயம் பெண்களுக்கு வெள்ளை இரத்த அணுக்கள் அதிகமாக இருந்து நோய் எதிர்ப்பு சக்திகளை வேகமாக உற்பத்தி செய்கிறது. [6] உளவியல்பேறுகாலத்திற்கு முந்தைய நாளமில்லாச் சுரப்பிகளின் வெளிப்பாடு பாரம்பரிய ஆண் அல்லது பெண்ணின் நடத்தையை வெளிப்படுத்தும் அளவை பாதிக்கும் முக்கியக் காரணியாக அமைகிறது. [7] [8] பொது புத்திசாலித்தனத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே புறக்கணிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன. [9] பெண்களை விட ஆண்கள் கணிசமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள விரும்புகிறார்கள். [10] ஆண்களும் பெண்களை விட ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்புள்ளது, இது மரபு, ஆண்ட்ரோஜன் வெளிப்பாட்டால் பாதிக்கப்படுகிறது. [11] [12] ஆண்களை விட பெண்கள் சராசரியாக அதிக பச்சாதாபம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால் இது அனைத்து பெண்களும் ஆனித்து ஆண்களையும் விட பச்சாதாபம் கொண்டவர்களாக இருப்பதில்லை. [13] தாக்கம் மற்றும் எதிர்விளைவுகள்பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவை ஒட்டுமொத்த சமுதாயத்தில் வறுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக வாதிடப்படுகிறது. [14] வெளிப்புற வாழ்வாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அல்லது அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்க தனிநபர்களின் திறன்களில் குடும்பம் தொடர்பான அறிவு மற்றும் வளங்கள் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. [15] உயர் கல்வி பெறுதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியன குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்தவும் சமூகம் முழுவதும் சமநிலையை மேம்படுத்துவதிலும் முக்கிய காரணியாக அமைகின்றது.பாலின சமத்துவ குறியீடுகள் வறுமையின் இந்த அம்சத்தை நிரூபிக்க கருவிகளை வழங்க முற்படுகின்றன. [15] வறுமை பல காரணிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் முக்கியமான ஒன்று பாலின ஊதிய இடைவெளி ஆகும். பெண்கள் அதிகமாக வறுமையில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஊதிய இடைவெளி முக்கிய காரணங்களில் ஒன்றாகும். [16] பாலின சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் சமூக பாதுகாப்பில் பின்வருவனவற்றை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச பன்னாட்டு நிறுவன ஆராய்ச்சியாளார்கள் வாதிடுகின்றனர்: சமூகப் பாதுகாப்பு அமைப்பானது பெண்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அளிக்கிறது பராமரிப்பு செலவுகளுடன் பெற்றோரை ஆதரித்தல் (எ.கா தென்னாப்பிரிக்க குழந்தை/ஊனமுற்றோர் உதவித்தொகை) பெண்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குதல் (எ.கா பங்களாதேஷின் பெண்கள் கல்வி உதவித்தொகை திட்டம்) சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு அளித்தல். [17] சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைப்பதில் மற்றும் மதிப்பீடு செய்வதில் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களையும் (பெண்கள் மற்றும் ஆண்கள்) சேர்த்தல் திட்ட ஊழியர்களுக்கான பாலின விழிப்புணர்வு மற்றும் பகுப்பாய்வு பயிற்சி சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia