பாவட்டை
![]() பாவட்டை (Pavetta indica) என்பது தமிழக புதர்க்காடுகளில் நன்கு பச்சை நிறத்துடன் காணப்படும் புதர்ச்செடி வகையாகும். இதன் அறிவியற்பெயரில் பேரினப்பெயர் இவ்வினத்தின் தமிழ்-மலையாளப் பெயரிலிருந்து பெறப்பட்டது.[1][2] இதன் மலர் தமிழகத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் இட்டலிப்பூ போன்று காணப்படும். இம்மலர்க்கொத்துகள் மிகுந்த வாசனை கொண்டவை. இதன் இலை, வேர், காய் ஆகியன மருத்துவப்பயன் கொண்டவை.[3] விளக்கம்பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது ஆவணி ஐப்பசி மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும்.. பச்சையான காய்கள் முதிர்ந்து கருப்பு நிறமாக உருண்டையாக இருக்கும். இது 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டது. ஆசியா, ஆப்ரிகா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும். இது விதை மூலம் இனப்பெருக்கும் செய்கிறது. மருத்துவப் பயன்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia