பா. ர. பழனிச்சாமி
பா .ர. பழனிச்சாமி (Pa. Ra. Palanisamy) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியானதமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். எம். முத்துரத்னம் இயக்கிய இப்படத்தில் மூகூர் சுந்தர், அஸ்வின், சீனிவாச ராவ், மீனாட்சி கைலாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் அலெக்ஸ், கராத்தே ராஜா, பாண்டு, பாலா சுப்பிரமணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பி. தங்கவேல் தயாரித்த இப்படத்திற்கு, தினா இசை அமைத்துள்ளார். படமானது 11 சூன் 2010 அன்று வெளியானது.[1][2] நடிகர்கள்
தயாரிப்பு1000 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய மூத்த நடனக் கலைஞர் முகூர் சுந்தர், பா. ர. பழனிசாமி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . தங்கம் ரியல் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சீனிவாச ராவ், மீனாட்சி கைலாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர், பாண்டு, அலெக்ஸ், கராத்தே ராஜா ஆகியோர் துணை நடிகர்களாக நடித்தனர். படத்திற்கான இசையை தினா அமைத்தார். சுரேஷ் தேவராஜ் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த படத்தில் முகூர் சுந்தரும் அவரது மகன்களான பிரபுதேவா, ராஜூ சுந்தரம் ஆகியோர் நடனமாடியுள்ளனர். இதை நடன இயக்குநர் ஸ்ரீதர் அமைத்தார்.[3][4][5][6] இசைதிரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தினா அமைத்தார். 2010 இல் வெளியான இந்த இசைப்பதிவில், சுரேஷ் தேவராஜ் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[7]
வெளியீடுஇந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரியான வசூலை ஈட்டியது.[8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia