பிகானேர் இராச்சியம் (Bikaner State) இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம் 60,391 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. பிரித்தானிய இந்திய ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1947l இந்தியப் பிரிவினையின் போது, 7 ஆகஸ்டு 1947ல் பிகானேர் இராச்சியம், இந்தியாவுடன் இணைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியத்தின் தலைநகரம் பிகானேர் நகரம் ஆகும்.
இராசபுத்திரர்களின் ரத்தோர் வம்சத்தினரால் 1495ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம், 9 மார்ச் 1818ல் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.[1]பிகானோர் இராச்சியத்தை, 7 ஆகஸ்டு 1947 அன்று, இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், பிகானோர் மன்னர் கையொப்பமிட்டார். [2]
பிகானோர் இராச்சிய மன்னர்கள்
19 சூன் 1698 – 15 டிசம்பர் 1700 சொரூப் சிங் (பிறப்பு:1689 - இறப்பு: 1700)
15 டிசம்பர் 1700 – 16 டிசம்பர் 1735 சுஜன் சிங் (b. 1690 - d. 1735)
16 டிசம்பர் 1735 – 15 மே 1746 சோரவர் சிங் (b. 1713 - d. 1746)
15 மே 1746 – 25 மார்ச் 1787 கஜ் சிங் (b. 1723 - d. 1787)
25 மார்ச் 1787 – 25 ஏப்ரல் 1787 இரண்டாம் இராஜ் சிங் (b. 1744 - d. 1787)
25 ஏப்ரல் 1787 - 9 அகடோபர் 1787 பிரதாப் சிங் (b. 1781 - d. 1787)
25 ஏப்ரல் 1787 – 25 மார்ச் 1828 சூரத் சிங் (b. 1766 - d. 1828)
25 மார்ச் 1828 - 7 ஆகஸ்டு 1851 ரத்தன் சிங் (b. 1790 - d. 1851)
7 ஆகஸ்டு 1851 – 16 மே 1872 சர்தார் சிங் (b. 1818 - d. 1872)
16 மே 1872 – 19 ஆகஸ்டு 1887 துங்கர் சிங் (b. 1854 - d. 1887)
19 ஆகஸ்டு 1887 - 2 பிப்ரவரி 1943 கங்கா சிங் (b. 1880 - d. 1943) (from 24 Jul 1901, Sir Ganga Singh)
19 ஆகஸ்டு 1887 – 16 டிசம்பர் 1898 பிரித்தானிய முகமையாளர்கள் ஆட்சி
2 பிப்ரவரி 1943 – 15 ஆகஸ்டு 1947 சதூல் சிங் (b. 1902 - d. 1950) [3]
Martinelli, Antonio; Michell, George (2005). The Palaces of Rajasthan. London: Frances Lincoln. p. 271 pages. ISBN978-0-7112-2505-3.
Tod, James. Annals and Antiquities of Rajasthan, Volume II (With a Preface by Douglas Sladen). Oriental Books Reprint Corporation. 54, Jhansi Road, New Delhi-1100055.