பிக்கா ஆளுநரகம்
பெக்கா கவர்னரேட் (Beqaa Governorate, அரபி: البقاع Al-Biqā' ) என்பது லெபனானில் உள்ள ஒரு ஆளுநரகம் ஆகும். மாவட்டங்கள்2014 முதல், பெக்கா கவர்னரேட்டில் மூன்று மாவட்டங்கள் உள்ளன:
பால்பெக் ஹெர்மல் ஆளுநரகம் என்ற புதிய ஆளுநரகத்தை உருவாக்க இந்த ஆளுநரகத்தில் இருந்து பால்பெக் மாவட்டத்தையும், ஹெர்மல் மாவட்டத்தையும் பிரிக்க 2003 ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. [1] பால்பெக் ஹெர்மல் ஆளுநரகத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக அதன் முதல் ஆளுநரை 2014 இல் நியமித்ததன் மூலமாக அதன் நடைமுறை தொடங்கியது. மக்கள் வகைப்பாடு![]() வாக்காளர் பட்டியல் தரவுகளின்படி, ஆளுநரகத்தில் தோராயமாக 41% கிறிஸ்தவர்களும், 52% முஸ்லிம்களும், 7% டுரூஸ் மக்கள் (313505 வாக்காளர்கள்) வாழ்கின்றனர். ஸஹ்லே மாவட்டத்தில் (கதா) கிறிஸ்தவர்கள் 55% என வாக்காளர்களில் பெரும்பான்மையினராக உள்ளனர் (மொத்த வாக்காளர் 172555). மேற்கு பெக்கா-ரஷாயா மாவட்டத்தில் (இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டமாக இணைக்கப்பட்டுள்ளன), கிறிஸ்தவ வாக்காளர்கள் 22.22% என உள்ளனர் (மொத்தம் 140950). குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia