பிக்சார்
பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா எமெரிவில்லேவில் அமைந்துள்ள த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமான கணனி இயக்கும்பட வளாகம் ஆகும். பிக்ஸர் 1979 ஆம் ஆண்டில் கிராபிக்ஸ் குழு என அழைக்கப்படும் லூகாஸ்பில்ம் என்ற நிறுவனத்தில் கணினி பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி 3, 1986 அன்று ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்ஸின் நிதி உதவியால் அவர் பெரும்பான்மை பங்குதாரராக ஆனார்.[1] பிக்ஸர் பங்குகளின் ஒவ்வொரு பங்கையும் டிஸ்னி பங்குகளின் 2,3 பங்குகளாக மாற்றுவதன் மூலம் வால்ட் டிஸ்னி நிறுவனம் 2006 இல் 7.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிக்ஸரை வாங்கியது. இவ் நிறுவனம் ஒரு கட்டத்தில் டிஸ்னியின் பங்குதாரராக மாறியது.[2] இந்த நிறுவனத்தின் மூலம் டாய் ஸ்டோரி (1995), டாய் ஸ்டோரி 3 (2010), பைண்டிங் டோரி (2016)போன்ற பல கணினி இயக்கும் படங்களை தயாரித்துள்ளது.[3] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia