பிசின் மாவட்டம் (Pishin District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பிசின் நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு வடக்கே 55.4 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 851 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 147,185 குடியிருப்புகள் கொண்ட பிசின் மாவட்ட மக்கள் தொகை 8,35,482 . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.34 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 51.07% ஆகும்.[6][7]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 318,031 (38.07%) ஆக உள்ளனர்.[8]நகர்புறங்களில் 2,43,785 (29.18%) மக்கள் வாழ்கின்றனர்.[6]இந்து & கிறித்துவச் சமயச் சிறுபான்மையோர் 2,441 (0.29%) வாழ்கின்றனர்.[9]99.07% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.[10]
வேளாண்மை & கால்நடைகள்
பிசின் மாவட்டத்தில் கோதுமை, பார்லி, உருளைக்கிழங்கு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, ஆப்ரிகோட் போன்றவைகள் பயிரிடப்படுகிறது. மேலும் ஆடுகள் வளர்க்கப்படுகிறது.[11]