பிசுக்குமை
பிசுக்குமை அல்லது பாகுநிலை (viscosity) என்பது சறுக்குப்பெயர்ச்சித் தகைவு அல்லது நறுக்குத் தகைவினால் தன்னுரு மாறிவிடாமல் இருக்க ஒரு பாய்மம் கொண்டிருக்கும் எதிர்ப்பின் அளவு ஆகும்.[1]பொதுவாக, இதனை பாய்மத்தின் தடிமன் எனவோ, அதன் பாய்விற்கான எதிர்ப்பு எனவோ கருதுவதும் உண்டு. ஒரு பாய்மத்தின் பாய்விற்கான உள்ளெதிர்ப்பே பிசுக்குமை என்று கொள்ளலாம். அல்லது, இதனைப் பாய்ம உராய்வின் ஒரு அளவை என்றும் கொள்ளலாம். காட்டாக, நீரின் பிசுக்குமை மிகவும் குறைவு, தேன், எண்ணெயின் பிசுக்குமை அதிகம்.[2] மெய்யான பாய்மங்கள் (real fluids) எல்லாமே நறுக்குத் தகைவிற்கு உள்ளெதிர்ப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு நறுக்குத்தகைவெதிர்ப்பு ஏதுமின்றி இருக்கும் பாய்மங்கள் கருத்தியல் பாய்மங்கள் (ideal fluids) எனப்படும். பிசுக்குமைக் கெழு (பாகுநிலை எண் η)பிசுக்குமை அளவையைக் குறிக்கப் பொதுவாக, பிசுக்குமைக் கெழு அல்லது பாகுநிலை எண் η (Co-efficient of Viscosity) என்னும் எண்ணைப் பாவிப்பதுண்டு. பாய்மத்தைப் பொருத்தும், அதன்மீது சுமத்தப்படும் அழுத்தத்தைப் பொருத்தும் பிசுக்குமையைப் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் சில:
இவற்றுள் அதிகம் விளங்கப் பெறுவது நறுக்குப் பிசுக்குமையும் துனைமப் பிசுக்குமையுமே.[3][4] மேலும் பார்க்கஉசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia