பிணச்சீரமைப்பு![]() பிணச்சீரமைப்பு (Embalming) என்பது பிணத்தை அதன் புத்தியல் உருக்குலையாதவாறு பாதுகாக்கும் ஒர் அறிவியற் கலையாகும். இறுதிச்சடங்கு நேரத்தில், மதச்சார்பு காரணங்கள் அல்லது மருத்துவம் மற்றும் உடற்கூற்று மாதிரியாக பிணத்தை பொதுப்பார்வைக்குக் காட்சிப்படுத்துவது இச்சீரமைப்பின் உள்நோக்கமாகும்[1]. பிணத்தைத் துப்புரவாக்கல், முன்னிலைப்படுத்துதல், பேணிக்காத்தல் அல்லது மீளமைத்தல் ஆகிய மூன்று செயல்களை இலக்காகக் கொண்டு பிணச்சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு கலாச்சார மக்களிடையில் இப்பிணச்சீரமைப்புக் கலை மிகநீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல கலாச்சாரத்தினரிடம் இப்பிணச்சீரமைப்புச் செயல்முறை பொருள் பொதிந்த ஒரு மதச்சடங்காகவும் கருதப்படுகிறது. பிணச்சீரமைப்புக் கலையானது, பாடம் செய்தல் என்ற கலையிலிருந்து வேறுபட்டதாகும். இறந்த விலங்கின் உடல் தோலை உரித்து, எஞ்சிய சதைகளைக் கவனமாக நீக்கி, பிணத்தின் அளவும் எடையும் உள்ள ஒரு மாதிரி உடலமைப்பை உருவாக்கி, பதப்படுத்தப்பட்ட உண்மையான தோலால் போர்த்திப் பாதுகாப்பது பாடம் செய்தல் கலையாகும்.இறந்தவரின் உடலை முழுமையாக அப்படியே பாதுகாக்கும் கலை பிணச்சீரமைப்புக் கலையாகும். மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia