பிணைப்பு பிளவு

பிணைப்பு பிளவு (Bond cleavage)  என்பது வேதியியற் பிணைப்புகளின் பிளவைக் குறிக்கிறது.

பொதுவாக, பிணைப்பின் பிளவில் இரண்டு வகை காணப்படுகிறது: பிணைப்பின் பிளவு நடைபெறும் தன்மையை வைத்து  சீரான பிளவு மற்றும் சீரற்ற பிளவு என இருவகைப்படும்.

சீரான பிளவு அல்லது சமமான பிளவில் சகப் பிணைப்பில் காணப்படும் இரண்டு எதிர்மின்னிகள் உருவாகும் இரண்டு விளைபொருட்களிடையே சமமாகப் பகிரப்படுகிறது. ஆகவே, இந்த செயல்முறையானது, இச்செயல்முறையானது சமமான அல்லது சீரான பிளவு மற்றும் தனிஉறுப்பு பிளவு என அழைக்கப்படுகிறது.

சீரற்ற பிணைப்பு பிளவைப் பொறுத்தவரை, பிணைப்பானது, உண்மையில் பங்கிடப்பட்ட இணை எதிர்மின்னிகள் ஏதேனும் ஒரு பகுதிப்பொருளுடன் தங்கி விடுகின்றன. இந்தச் செயல்முறையானது அயனிப்பிளவு எனவும் சீரற்ற பிளவு எனவும் அழைக்கப்படுகிறது..

பிணைப்பு பிரிவு ஆற்றல் என்பது ஒரு வேதியியற் பிணைப்பினை சமமான அல்லது சீரான பிளவின் மூலமாக பிரிப்பதற்குத் தேவையான ஆற்றல் என்பதாகக் குறிப்பிடப்படுகிறது. உயிரிய வேதியியலில், பெரு மூலக்கூறுகளை  அவைகளுக்கிடையில் காணப்படும் அகப்பிணைப்புகளை உடைப்பது வளர்சிதை மாற்றம் என அழைக்கப்படுகிறது. பிணைப்புகளில் பிளவை ஏற்படுத்தும் நொதிகள் வினைகளி்ல் காரணியான நொதிகள் லையசேசுகள் என அழைக்கப்படுகின்றன. அவ்வாறாயின், ஆக்சிசனேற்றம் அல்லது ஒடுக்க வினைகளில் சற்று நீளமாக நடக்கிறது. இத்தகைய வினைகளில் அவை ஐதரோலேசசு மற்றும் ஆக்சிடோ ஒடுக்க வினைகள் ஆகியவற்றால் முறையே ஐதரோலேசசுகள் மற்றும் ஆக்டிசிடோ ரெடக்டேசுகள் என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

வேதியியற் பிணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya