பிதேசியா (நாடகம்)
பிதேசியா (Bidesiya), அல்லது பகாரா பகார் (Baharā Bahār) என்பது போச்புரி நாடக ஆசிரியர் பிகாரி தாக்கூரின் ஒரு போச்புரி நாடகமாகும்.[1][2][3][4] பெண்கள் அதிகாரம், இடம்பெயர்வு மற்றும் வறுமை குறித்து பிகாரி தாக்கூர் எழுதிய பல நாடகங்களில் இதுவும் ஒன்றாகும்.[5] இந்நாடகங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்ததன் காரணமாக இது போச்புரி பிராந்தியத்தின் நாட்டுப்புற நாடக பாணியாக வெகுவாக மாறத் தொடங்கியது. இந்த நாடகங்கள் அக்காலங்களில் இராமாயணம் போலவே மிகவும் பிரபலமாக இருந்ததாக பல்வேறு அறிஞர்கள் கருதுகின்றனர்.[6]இந்த நாடகம் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் போச்புரி சமூகத்தில் பெண்களின் நிலை, இடம்பெயர்வு மற்றும் வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சித்தரிப்பதாக உள்ளது. இந்நாடகம் 1912 இல் இயற்றப்பட்டு, அரங்கேற்றப்பட்டு 1917 இல் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.[7] கருப்பொருள்சமசுகிருதத்தில் உள்ள மேகதூதம் மற்றும் ராமாயணம் போன்ற காவியங்களைப்போல் பிதேசியா நாடகமும் கணவன் மனைவிக்கிடையிலான பிரிவைை மையமாகக்கொண்ட கருப்பொருளை உள்ளடக்கியது ஆகும்.[8] பெயர்கள்இந்த நாடகம் தொடக்கத்தில் கல்ஜுக் பஹார் என்று வெளியிடப்பட்டது. பின்னர் அது பஹாரா பஹார் என்று வெளியிடப்பட்டது. அதன் கதாபாத்திரத்தின் பெயர் பிதேசியா என்பதால் இது பிதேசியா என்ற பெயரில் பிரபலமானது.[9] செய்தி மற்றும் அரங்கேற்றம்வறுமை, இடம்பெயர்வு மற்றும் அவற்றின் தாக்கம் ஆகியவற்றின் பிரச்சினையை பிதேசியா மிகவும் பொழுதுபோக்கு வடிவத்தில் வைத்துள்ளது.[10] பிதேசியா நாடகம் ஒவ்வொரு ஆண்டும் நந்திகரின் தேசிய நாடக விழாவில் அரங்கேற்றப்படுகிறது.[11] பிதேசியாவின் பிரபலம்இந்த நாடகம் வட இந்திய மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமடைந்தது.[12]இதன் பிரபலத்தின் காரணமாக இது போச்புரி பிராந்தியத்தின் நாட்டுப்புற நாடக பாணியாக மாறியது.[13] மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia