பிந்தான் தீவு
பிந்தான் தீவு (ஆங்கிலம்: Bintan Island; இந்தோனேசியம்: Pulau Bintan அல்லது Negeri Segantang Lada) என்பது இந்தோனேசியா, ரியாவு தீவுக் கூட்டத்தில் அமைந்து உள்ள ஒரு தீவு ஆகும். இது ரியாவு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தீவின் தலைநகரம் தஞ்சோங் பினாங்கு (Tanjung Pinang).[1] பிந்தான் தீவின் வரலாறு 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது. அந்தக் காலக் கட்டத்தில், சீனா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையிலான கடல் பாதையில் ஒரு வர்த்தக மையமாக விளங்கியது.[2] பொதுபல நூற்றாண்டுகளாக இந்தத் தீவு சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் இருந்தது. பின்னர் 1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கையின் (Anglo-Dutch Treaty of 1824) மூலமாக டச்சு கிழக்கு இந்தியத் தீவுகளின் (Dutch East Indies) ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.[3] மலாக்கா நீரிணையில் உள்ள இந்தப் பிந்தான் தீவு, 12-ஆம் நூற்றாண்டில், "கடற்கொள்ளையர் தீவு" (Pirate Island) என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் கடற்கொள்ளையர்கள், இந்தக் கடல் பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்து வந்தனர்.[4] சுற்றுலாத் தலம்சிங்கப்பூர், மிக அருகில் உள்ள பெரிய நகரம். சிங்கப்பூர் நீரிணை வழியாகப் படகுகள் மூலமாக 45-50 நிமிடங்களில் பிந்தான் தீவை அடைந்து விடலாம். இந்தத் தீவில் கடற்கரை விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் அழகிய கடற்கரைகள் உள்ளன. பாலிக்கு அடுத்த நிலையில், இந்தத் தீவை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றி அமைக்க இந்தோனேசியா அரசங்கம் முயற்சிகள் எடுத்து வருகிறது.[5] மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia