பியம்மேத்தா வில்சன்பியம்மேத்தா வில்சன் (Fiammetta Wilson) (19 ஜூலை 1864 – 21 ஜூலை 1920) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் 1916 இல் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3][4][5] ![]() இளமையும் கல்வியும்வில்சன் 1864 ஜூலை 19 இல் எலனுக்கும் எஃப். எசு. வர்திங்டனுக்கும் உலோவசுடாஃப்ட்டில் பிறந்தார். இவரது தந்தையார் மருத்துவரும், அறுவையரும், இயற்கை அறிவியலில் ஆர்வம் கொண்டவரும் ஆவார். இவர் ஓய்வு பெற்றதும் நுண்ணோக்கியியல் ஆய்வில் ஈடுபட்டார். இவர் பியம்மேத்தாவை இயற்கை ஆய்வில் ஈடுபாடு கொள்ளச் செய்துள்ளார். இவர் செவிலியரால் வளர்க்கப்பட்டார். இவர் செருமனியிலும் சுவிட்சர்லாந்திலும் பள்ளிக்கல்வியைப் பெற்றார். இவர் இத்தாலியில் இசைப்பயிற்சி பெற்று இசைக்கலைஞர் ஆனார். இவர் குயில்தால் இசை, நாடகப் பள்ளியில் ஆசிரியராகவும் பல்லிய இசைப்பாளராகவும் உள்ளார். இவர் வில்லிசை வல்லுனர்; இசைப்பண் உருவாக்க வல்லவர். இவர் 1910 இல் வானியற்பியலாளராகிய ஆல்பிரெட் பவுலர் விரிவுரைகளைக் கேட்டு வானியலில் ஆர்வம் மீதுற்றார். இவர் வானியலின்பால் பெரிதும் கவரப்பட்டதால் அதற்காக தன் இசைத்துறையையே துறந்துவிட்டார்.[1][2] வாழ்க்கைப் பணிஇவர் தன் வாழ்நாள் முழுதும் கடுமையான உழைப்பைச் செலுத்தினார். இவர் வால்வெள்ளியின் மினுக்கலைக் கான ஆறுமணி நேரங்கூட முகில்சூழ்ந்த வானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். ஏ. கிரேசு குக் விண்கல் பிரிவின் பொறுப்பு இயக்குநராக ஆனதும் இவர் 1910 இல் பிரித்தானிய வானியல் கழகத்தில் சேர்ந்தார். இக்கழக உறுப்பினராக, இவர் வட, தென் அனலொளிகள், அந்திக் காலொளிகள், வால்வெள்ளிகள், விண்கற்கள் ஆகியவற்றை நோக்கீடுகள் செய்து அவைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தன் ஆய்வை விரிவுபடுத்தவும் ஆய்வுத் தகவல்களைத் துல்லியப்படுத்தவும் மரங்களைவிட உயரமான மேடையைத் தன் தோட்டத்தில் அமைத்தார். நோக்கிடுகளின்போது இவருக்குப் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளன; இவர் முதல் உலகப்போரின்போது நோக்கீட்டுக்கு வீச்சு விளக்குகளைப் பயன்படுத்தியதால் ஒரு காவலர் இவரை செருமானிய ஒற்றராகக் கருதி அச்சுறுத்தியுள்ளார். இவர் தன் வீட்டுக்கு அருகாமியில் குண்டுகளைப் போட்டபோதும் நோக்கீடுகளில் ஈடுபட்டார்.[6] இவர் 1910 முதல் 1920 வரை 10,000 க்கும் மேலான விண்கற்களை நோக்கீடு செய்துள்ளார். அவற்றில் 650 விண்கற்களுக்கு வழித்தடங்களையும் கணித்துள்ளார். இவர் 1913 இல் தனித்து 20டி/வெசுட்டுபால் வால்வெள்ளி புவியைக் கடப்பதைப் பதிவு செய்துள்ளார். இவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதும், 1916 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் பிரெஞ்சு வானியல் கழகத்திலும் அன்வர்சு வானியல் கழகத்திலும் உறுப்பினர் ஆனார். இவர் 1920 ஜூலையில் அர்வர்டு கல்லூரியில் எட்வர்டு சார்லசு பிக்கெரிங் ஓராண்டு ஆய்வுந்ல்கை இருக்கையில் அமர்த்தப்பட்டார். இப்பணியமர்தத்தை அறியும் முன்னே இவர் இறந்துவிட்டார்.[1][2][6] சொந்த வாழ்க்கைவில்சன் நடனமாடி மகிழ்வார். இத்தாலி, பிரெஞ்சு, செருமனி மொழிகளை விருப்பமுடன் கற்றார். இவர் விலங்குகளிடம் அன்பு காட்டினார்;எப்போதும் ஒரு நாயை உடன்வைத்திருந்தார்;குதிரையேற்றத்தில் வல்லவராக இருந்தார். இவர பயணம் செய்வதில் ஆர்வம் பூண்டிருந்தார். இவர் ஓராண்டு இத்தாலியில் தங்கிய பிறகு, கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பயணம் சென்றுவந்துள்ளார். இவர் வானியலில் ஆர்வம் கொள்வதற்கு முன்பாக பல சிறுகதைகளைப் பல இதழ்களில் எழுதியுள்ளார்.[2] முதன்மை வெளியீடுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia