பியூரான் (விண்கலம்)
பியூரான் விண்கலம் என்பது (உருசியம்: Бура́н, பஒஅ: [bʊˈran], பனிப்புயல்) வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் அமெரிக்காவின் விண்ணோடத்தை ஒத்த சோவியத் யூனியனின் சுற்றுப்பாதை வாகனமாகும். 1988-ஆம் ஆண்டில் மனிதரற்ற சோதனை பறத்தலுக்கு உட்படுத்தப்பட்டது; இதன்மூலம், விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரே சோவியத் விண்ணோடமாக இது திகழ்கிறது. சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, 1993-ஆம் ஆண்டில் பியூரான் விண்கல மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டது. பியூரான் விண்கலம், சோவியத் விண்ணோடமாக கருதப்பட்டது; இதன் வானூர்தி மட்டுமே மறுபயன்பாட்டுக்கு உகந்ததாகும் (உண்மையில், மறுபடியும் இது பறத்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை). விண்கலத்தின் முக்கியமான பகுதி - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய சக்திவாய்ந்த ஏவூர்தி பொறி (எனெர்ஜியா). பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தின் விமானப் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பியூரான் விண்கலம் (பறத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது), 2002-ஆம் ஆண்டில் பணிமனை இடிந்து விழுந்ததில் முற்றிலும் சேதமானது.[3] குறிப்புதவிகள்
|
Portal di Ensiklopedia Dunia