பிரதமர் கதி சக்தி
பிரதமர் கதி சக்தி பன்முக இணைப்புக்கான தேசியப் பெருந்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது (ஐஎஸ்டி Pradhānmantrī Gatī Shaktī). இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு போட்டிசார் மேம்பாடுகளை வழங்குவதற்காக 1.20 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு இந்தியப் பெருந் திட்டமாகும்.[1] வரலாறுஆகஸ்ட் 15, 2021 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்தத் திட்டத்தை அறிவித்தார்.[2][3] இந்தியாவின் அனைத்துப் பொருளாதார மண்டலங்களுக்கும் பன்முக இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதற்காக இந்தத் திட்டம் 2021 அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்டது; பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் அக்டோபர் 21, 2021 அன்று அங்கீகரிக்கப்பட்டது.[4] நோக்கமும் திட்டமும்இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தின் அனைத்துத் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை ஒன்றிணைத்து, திட்டங்களின் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலுக்காக ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[5][6][7][8] உதாரணமாக, இது இந்திய சாலைவழிகள், இந்திய ரயில்வே, இந்திய விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகங்களை ஒன்றோடொன்று இணைக்கும்.[9] தற்போதைய திட்டங்களை கண்காணிப்பதில் வெளிப்படைத்தன்மைக்கு இது உதவும் மற்றும் சமூகத்திற்கு வரவிருக்கும் இணைப்பு திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்கும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் நீடித்த 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது மற்றும் 2040 ஆம் ஆண்டில் 20 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக அதிகரிப்பது ஆகும்.[10][11] இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை உருவாக்கும்.[12] இந்தத் திட்டம் 196 முக்கியமான உள்கட்டமைப்பு இடைவெளித் திட்டங்களுக்கும் வேகத்தை அதிகரிக்கும். இதில் 22 உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்டன.[13][14][15][16] இந்திய ரயில்வே இந்தியாவிற்குள் 200 ரயில் முனையங்களை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கும். மேலும் ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 300 புதிய முனையங்களை உருவாக்கும்.[17][18] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia