பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆடைப் பூங்கா

இந்தியாவில் ஜவுளி உற்பத்தி செய்யும் தொழில்துறைகளை ஊக்குவிப்பதற்காக பிரதம மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் பூங்கா (PM MITRA) என்னும் ஒரு திட்டத்தை 2021 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டம் ஐக்கிய நாடுகள் சபை நிலையான வளர்ச்சி இலக்கு 9-ஐ ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நூற்பு, நெசவு, சாயம் பூசுதல் அல்லது பதப்படுத்துதல் மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட ஆடை உற்பத்தியின் முழு செயல்முறையையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. [1]

வரலாறு

ஜவுளித் துறையை ஊக்குவிப்பதற்காக மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடை (MITRA) 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.[2][3][4] மாநிலங்களில் ஏற்கனவே தொழிற்துறை உள்ள இடங்களையோ புதிய இடங்களையோ தேர்ந்தெடுத்து மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் பூங்காக்களை அமைக்கலாம்.[5][6]

பூங்காக்கள்

4, 445 கோடி ரூபாய் செலவில் 7 இடங்களில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.[7][3][8]

பிரதம மந்திரி மித்ரா பூங்காக்கள் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடங்கள்:[9]

வரிசை எண் இடம் வகை
1 விருதுநகர், தமிழ்நாடு புதிது
2 நவ்சாரி, குசராத் புதிது
3 கல்புர்கி, கருநாடகம் புதிது
4 தார், மத்தியப்பிரதேசம் புதிது
5 லக்னோ, உத்திரப்பிரதேசம் புதிது
6 வாரங்கல், தெலுங்கானா ஏற்கனவே உள்ளது
7 அம்ராவதி, மகாராட்டிரம் ஏற்கனவே உள்ளது

நன்மைகள்

மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆடை பின்வரும் வசதிகளைக் கொண்டிருக்கும்ஃ [10]

  • ஜவுளித் தொழிலுக்கு முழுமையான மதிப்புச் சங்கிலியாக ஒருங்கிணைந்த அமைப்பில் பெரிய அளவிலான மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
  • சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதில் உதவியாக இருக்கும்.
  • இந்திய ஜவுளியை போட்டித்திறன் மிக்கதாக ஆக்குகிறது.
  • வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்.

மேலும் காண்க

சான்றுகள்

  1. https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154084&ModuleId=3
  2. "Cabinet approves setting up of 7 mega integrated textile region and apparel parks with ₹4,445 crore outlay". thehindu.com/. 6 October 2021. https://www.thehindu.com/news/national/cab-approves-setting-up-of-7-mega-integrated-textile-region-and-apparel-parks-with-rs-4445-cr-outlay/article36858058.ece?homepage=true. 
  3. 3.0 3.1 "States must ensure affordable power, land, effective labour laws to be part of textiles park scheme: Piyush Goyal". The Economic Times. 7 July 2022. https://economictimes.indiatimes.com/news/india/states-must-ensure-affordable-power-land-effective-labour-laws-to-be-part-of-textiles-park-scheme-piyush-goyal/articleshow/92727310.cms. 
  4. "Centre Approves ₹ 4,445 Crore For Scheme To Set Up Mega Textile Parks". ndtv.com. 6 October 2021. https://www.ndtv.com/india-news/centre-union-cabinet-approves-rs-4-445-crore-for-scheme-to-set-up-mega-textile-parks-2565894. 
  5. "Govt notifies PM Mega Integrated Textile Park Scheme for greenfield, brownfield sites". thehindubusinessline.com. 22 October 2021. https://www.thehindubusinessline.com/news/govt-notifies-pm-mega-integrated-textile-park-scheme-for-greenfield-brownfield-sites/article37125301.ece. 
  6. "Govt notifies setting up of 7 mega integrated textile region and apparel (PM MITRA) parks". indiainfoline.com. 25 October 2021. https://www.indiainfoline.com/article/news-sector-textile/govt-notifies-setting-up-of-7-mega-integrated-textile-region-and-apparel-pm-mitra-parks-121102500249_1.html. 
  7. "PM MITRA: Government releases 5 metrics to decide sites". The Economic Times. 19 January 2022. https://economictimes.indiatimes.com/industry/cons-products/garments-/-textiles/pm-mitra-government-releases-5-metrics-to-decide-sites/articleshow/88981526.cms?from=mdr. 
  8. "Union Cabinet approves setting up of 7 mega integrated textile region and apparel parks with Rs 4,445 cr outlay". deccanherald.com. 6 October 2021. https://www.deccanherald.com/national/union-cabinet-approves-setting-up-of-7-mega-integrated-textile-region-and-apparel-parks-with-rs-4445-cr-outlay-1037925.html. 
  9. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114277
  10. "Textiles ministry to follow 'challenge method' to select states for MITRA scheme" (in en). Business Today. 12 September 2021. https://www.businesstoday.in/latest/economy/story/textiles-ministry-to-follow-challenge-method-to-select-states-for-mitra-scheme-306494-2021-09-12. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya