பிராங்ளினைட்டு
மற்றொரு பல்வண்ணப் பளிங்குருவ குழு உறுப்பினரான மேக்னடைட்டைப் போலவே, பிராங்லினைட்டு மாதிரிகளில் இரும்பு (2+) மற்றும் பெரிக் (3+) இரும்புகள் இரண்டும் காணப்படுகின்றன. ஈரிணைதிற இரும்பு / அல்லது மாங்கனீசு பொதுவாக துத்தநாகத்துடனும் மூவிணைதிற மாங்கனீசு பெர்ரிக் இரும்புக்கு மாற்றாகவும் இடம்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். முதன் முதலில் பிராங்லினைட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பரந்த அளவிலான பிற கனிமங்களுடன் சேர்ந்து காணப்பட்டது. அவற்றில் பல ஒளிரும் தன்மை கொண்டிருந்தன. பொதுவாக, இது வில்லெமைட்டு, கால்சைட்டு மற்றும் சிங்சைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது. இந்தப் பாறைகளில், பரவலாக இவை சிறிய கருப்பு நிறப் படிகங்களாக அவற்றின் எண்முக முகங்கள் தெரியும் வகையில் படிகமாகின்றன. அரிதாக இது நிறைவடிவ படிகமாகவும் காணப்படுகிறது. பிராங்லினைட்டு துத்தநாகத் தனிமத்தின் முக்கிய தாதுவாகும். நியூ செர்சியில் உள்ள பிராங்ளின் சுரங்கம் மற்றும் இசுடெர்லிங் இல் சுரங்கங்களில் உள்ளூர் கண்டுபிடிப்பின் அடிப்படையில் தாதுவுக்கு இப்பெயரிடப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் பிராங்ளினைட்டு நியூ செர்சியின் மாநில கனிமமாக அறிவிக்கப்பட்டது.[3] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia