மூக்கு வழியாக பிராணவாயுவை குழாய் மூலம் செலுத்தும் முறைஆம்புலன்ஸ் வாகனத்தில் பிராணவாயு கலன்
பிராணவாயு சிகிச்சை அல்லது உயிர்வளி மருத்துவ முறை (Oxygen therapy), மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, மருத்துவமனையில் பிராணவாயுவை மூக்கு வழியாக நுரையீரலுக்கு நேரடியாக செலுத்தும் முறை ஆகும். இதனால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இது மருத்துவ சிகிச்சையில் ஒரு பகுதியாகும்.[1]
மேலும் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும், நச்சு வாயுக்களை சுவாசித்ததால் ஏற்படும் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும், கொத்துத் தலைவலி[2]உள்ளவர்களுக்கும் மற்றும் உள்ளிழுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்படும் போது நுரையீரலில் போதுமான பிராணவாயுவை பராமரிக்க பிராணவாயு சிகிச்சை வழங்கப்படுகிறது.[3]
நீண்டகாலம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு க்ருதியில் குறைந்த அளவிலே பிராணவாயு இருக்கும். அவ்வாறு உள்ளவர்களுக்கு பிராணவாயு சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.[4][1] இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயுவை எடுத்துச் செல்ல உயிர்வளி சிகிச்சை உதவுகின்றன. நோயாளிகளின் மூக்கு வழியாக நைலான் குழாய் அல்லது முகமூடி குழாய் வழியாகவும் பிராணவாயு செலுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.[5][6]மேலும் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு நுரையீரல் அழற்சி ஏற்படுவதால், மூச்சுத் திணறல் ஏற்படும் போது பிராணவாயு சிகிச்சை வழங்கப்படுகிறது.