பிரிக்சு தலைவர்களின் பட்டியல்பிரிக்சு குழுமம் 2009ஆம் ஆண்டு உருவானதில் இருந்து ஒவ்வொரு பிரிக்சு மாநாட்டிலும் தங்கள் நாடுகளின் சார்பாளர்களாக பங்கேற்ற தலைவர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. இக்குழுமத்தில் ஐந்து நாடுகள், பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு, தென்னாப்பிரிக்கா அடங்கியுள்ளன. பிரிக்சு ஒவ்வொரு ஆண்டும் மாநாடு கூட்டுகின்றது; இதில் ஒவ்வொரு நாட்டின் தலைவரும் பங்கேற்கின்றனர. ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுத் தலைமையை சுழல்முறையில் பங்கிட்டுக் கொள்கின்றனர்; இத்தலைவரே மாநாட்டை நடத்துவதோடு மாநாட்டிற்கான செயற்றிட்டத்தை தீர்மானிக்கின்றார். இக்குழுமம் துவக்கத்தில் பிரிக் நாடுகள் என தென்னாப்பிரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தென் ஆபிரிக்கா மூன்றாண்டுகள் கழித்து 2011இல் இணைந்த பிறகு இக்குழுமம் பிரிக்சு என அழைக்கப்படலாயிற்று.
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia