பிரித்தானிய அலகுகள்![]() ![]() இம்பீரியல் அலகுகள் (imperial units) அல்லது இம்பீரியல் முறைமை (பிரித்தானிய இம்பீரியல் என்றும்[1] அழைக்கப்படுகின்றது) முதன்முதலாக 1824 ஆம் ஆண்டில் பிரித்தானிய எடைகளும் அளவுகளும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டது. இது பின்னர் (1959இல்) சீர்திருத்தப்பட்டு சில குறைக்கப்பட்டன. இது பிரித்தானியப் பேரரசு முழுதும் அலுவல்முறையாகக் கடைபிடிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முன்னாள் பேரரசில் அங்கமாக இருந்த பல நாடுகள் தங்கள் முதன்மை அளவீடு முறைமையாக மெட்ரிக் முறைமைக்கு மாறிவிட்டன. ஐக்கிய இராச்சியம் மட்டும் 2011 நிலவரப்படி பத்துகளின் மடங்குகளில் பகுதியாக மாறியுள்ளது. இந்தியாவில்1870இல் இயற்றப்பட்ட இந்திய எடைகளும் அளவுகளும் சட்டம் பிரித்தானிய இம்பீரியல் முறைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தவிர வட்டார அளவீடு முறைமைகளும் நடப்பில் இருந்தன. இந்திய விடுதலை|விடுதலைக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டில் மெட்ரிக் முறைமைக்கு மாற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 1962 வரை இரு முறைமைகளும் இணையாக பயன்படுத்தப்பட்டாலும் ஏப்ரல் 1962 முதல் அலுவல் முறையாக பிற அளவீடு முறைமைகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் இவை அலுவல்சாரா அளவீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அடுக்கக முதலீட்டாளர்கள் பரப்பளவை இன்னமும் ஏக்கர் மற்றும் சதுர அடிகளில் விவரிக்கின்றனர். ஒருவரின் உயரத்தை அளவிட அடி மற்றும் அங்குலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரிக் அலகுகளுடன் இணையாக அடி, அங்குலம், கசம், பாரன்ஹீட் மற்றும் ஏக்கர் என்பன பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. [2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia