பிரியா விகார் கோயில்
![]() பிரியா விகார் கோயில் அல்லது பிரசாத் பிரியா விகார் (Temple of Preah Vihear) என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது கம்போடியாவின் டாங்கிரெக் மலையில் 525 மீட்டர் உயரத்தில் தாய்லாந்தின் வடகிழக்கில் சிசாக்கெட் மாகாண எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் கிபி 11ம், 12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 1962 இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. ஜூலை 7, 2008 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது[1]. வெளி இணைப்புகள்
குறிப்புகள்
![]() |
Portal di Ensiklopedia Dunia