பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல்
பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் (Friedrich Wilhelm Bessel) (இடாய்ச்சு: [ˈbɛsəl]; 22 ஜூலை 1784 – 17 மார்ச்சு 1846) ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புவிப்புற அளவையியலாளரும் ஆவார். இவர் இடமாறு தோற்றப் பிழை வாயிலாக முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். டேனியல் பெர்னவுலி கண்டறிந்த சிறப்புவகைக் கணிதச் சார்புகள் பெசல் சார்புகள் என இவரது இறப்புக்குப் பிறகு அழைக்கப்படுகின்றன. வாழ்க்கையும் குடும்பமும்இவர் மிண்டெநிரேவன்பர்கின் ஆட்சி மையம் ஆகிய மிண்டெனில் ஓர் அரசுப் பணியாலரி இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவர் செருமனியில் இருந்த பெரிய கூட்டுக் குடுமபத்தில் பிறந்தார். இவர் தன் 14 ஆம் அகவையில் பிரேமனில் இருந்த குலென்கேம்ப் இறக்குமதி-ஏற்றுமதி குழுமத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார்.சரக்குக் கப்பல் வணிகம் இவரை நாவாய்க் கணக்கீடுகளுக்கும் பின்னர் இதன்வழி நாவாய்ப் பயண நெட்டாங்கைக் கணக்கிட வானியலுக்கும் திருப்பியது. குறிப்புகள்மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia