பிருந்தா காரத்
பிருந்தா காரத் (பிறப்பு: அக்டோபர் 17, 1947) ஓர் இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி ஆவார். பிருந்தா காரத் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2004இல் இக்கட்சியின் போலிட்பூரோவில் சேர்ந்தார். பிருந்தா காரத் அனைத்திந்திய சனநாயகப் பெண்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பல ஆண்டுகள் செயற்பட்டு வருகிறார். இவர் 2005 முதல் 2011 வரை உள்ள காலத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத்தின் மனைவி ஆவார். இளமையும் கல்வியும்பிருந்தா 1947ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் ஒஷ்ருகோனா மித்ரா, சூரஜ் லால் தாசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாயார் வங்காளத்தினைச் சேர்ந்தவர். இவரது தந்தை புதிதாக உருவாக்கப்பட்ட பாக்கித்தானின் இலாகூரிலிருந்து இந்தியா வந்த பஞ்சாபி அகதி. காரத் நான்கு உடன்பிறந்தவர்களுடன் வளர்ந்தார். இவருக்கு ஒரு அண்ணன், ஒரு மூத்த சகோதரி, ஒரு தங்கை இருந்தனர். அவருடைய தந்தை இவர்களை "தாராளவாத மற்றும் மதச்சார்பற்ற" குடும்பத்தினராக வளர்த்தார். 2005ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், "எங்களுக்கு மிகப்பெரிய சுதந்திரம் இருந்தது" என்று இவர் நினைவு கூர்ந்தார்.[1] இவருக்கு ஐந்து வயது இருக்கும்போது தாயார் இறந்தார்.[2] 12 அல்லது 13 வயது வரை, இவர் கொல்கத்தாவில் தங்கியிருந்தார். ஐரிஷ் கன்னிமார் மடமான கீழ் லொரேட்டோ ஹவுஸில் படித்தார். பின்னர், இவர் தேராதூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் சேர்ந்தார். இங்கு இவர் தடகள திறமைகளை வெளிப்படுத்தினார். இதன் மூலம் 16வயதில் புது தில்லியின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் எளிதாக சேர்ந்தார்.[1][3][4] இந்த நேரத்தில், இவர் தனக்கு "அரசியல் உந்துதல்" எதுவும் இருந்ததாக கருதவில்லை. இருப்பினும் இவர் நாடகம், விவாதங்களில் ஆர்வம் காட்டினார். இவரது சிந்தனையினை ஊக்குவித்தப் பேராசிரியராக பெண்ணிய பொருளாதார நிபுணர் தேவகி ஜெயின் இருந்தார்.[1] குடும்பம்பிருந்தா 7 நவம்பர் 1975-இல் பிரகாசு காரத்தை மணந்தார்.[5][6] கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். பிரகாசு காரத் ஒரு முக்கிய பொதுவுடமைக் கட்சித் தலைவர். இவரது சகோதரி இராதிகா ராய் என்டிடிவியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரணாய் ராயை மணந்தார்.[1] 2005ஆம் ஆண்டில், 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக இவரது மருமகள் ஷோனாலி போஸ் தயாரித்த அமு, திரைப்படத்தில் இவர் பங்கேற்றார்.[7] இவர் வரலாற்றாசிரியர் விஜய் பிரசாத்தின் அத்தை ஆவார். இலக்கியப் படைப்புகள்பிருந்தா, சர்வைவல் அண்ட் எமன்சிபேஷன்: நோட்ஸ் ஃப்ரம் இந்தியன் வுமன்ஸ் ஸ்ட்ரகிள்ஸ் என்ற நூலின் ஆசிரியர் ஆவார். இது இடதுசாரி கண்ணோட்டத்தில் இந்தியாவில் பெண்கள் இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாகும்.[8][9] மேற்கோள்கள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia