இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள்.பிரெஞ்சுத் தாக்கத்தின் உச்சத்தில் 1741-1754.கிழக்கு இந்தியக் கம்பனி படையணியின் கொடி.
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அல்லது பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (French East India Company, French: La Compagnie française des Indes orientales அல்லது Compagnie française pour le commerce des Indes orientales) 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது குடியேற்றவாத இந்தியாவில்பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.
கிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக சப்பானில் இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்[1] மற்றும் இசஃபகான், பெர்சியாவில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு [2] இயக்குனர்களாக இருந்தனர்.
Subramanian, Lakshmi, ed. (1999). French East India Company and the Trade of the Indian Ocean: A Collection of Essays by Indrani Chatterjee. Delhi: Munshiram Publishers. {{cite book}}: |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
The French East India Company (1785-1875) History of the last French East India Company on the site dedicated to its business lawyer Jean-Jacques Regis of Cambaceres.