பிரெடிரிக் சிலுபா

பிரெடெரிக் சிலுபா
2வது சாம்பியாவின் அரசுத் தலைவர்
பதவியில்
நவம்பர் 2, 1991 – சனவரி 2, 2002
துணைலெவி முவனவாசா
முன்னையவர்கென்னத் கவுண்டா
பின்னவர்லெவி முவனவாசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-04-30)ஏப்ரல் 30, 1943
கித்வெ, வடக்கு ரொடீசியா
இறப்புசூன் 18, 2011(2011-06-18) (அகவை 68)
லுசாக்கா, சாம்பியா
தேசியம்சாம்பியர்
அரசியல் கட்சிபல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
துணைவர்(கள்)வெரா டெம்போ (?–2000)
ரெஜினா முவான்சா (2002–2011)
பிள்ளைகள்9
தொழில்தொழிற்சங்கத் தலைவர்
சமயம்பெந்தகோஸ்து சபை இயக்கம்

பிரெடிரிக் ஜேகப் டைடஸ் சிலுபா ( Frederick Jacob Titus Chiluba, ஏப்ரல் 30, 1943 – சூன் 18, 2011) சாம்பியாவின் அரசியல்வாதியும் 1991 முதல் 2002 வரை இரண்டாவது சாம்பிய அரசுத்தலைவராக பணியாற்றியவரும் ஆவார். தொழிற்சங்கத் தலைவரான சிலுபா நாட்டில் முதன்முதலாக பல கட்சிகள் பங்கேற்ற 1991ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் பல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்; இத்தேர்தலில் விடுதலை பெற்ற நாளிலிருந்து தொடர்ந்தும் நீண்டநாட்களும் குடியரசுத் தலைவராக இருந்த கென்னத் கவுண்டாவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டவமைப்பின்படி மூன்றாம் முறை சிலுபா 2001இல் போட்டியிட முடியாததால், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் லெவி முவனவாசா பல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். சிலுபாவின் பதவி விலகலுக்குப் பிறகு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது; நீண்டநாட்கள் நடந்த புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 2009ஆம் ஆண்டில் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இறப்பு

சிலுபா சூன் 18, 2011 நள்ளிரவில் காலமானார்.[1] அவரது உதவியாளர் எம்மானுவல் முவாம்பா இதனை அறிவித்தார். சூன் 17 அன்று சிலுபா வழமையாக இயங்கியதாகவும் அவரது வழக்கறிஞர்களை சந்தித்ததாகவும் முவாம்பா கூறினார். பின்னதாக வயிற்றுவலியால் அவதியுற்றதாக கூறினார்.[1]

மேற்சான்றுகள்

முன்னர் சாம்பியாவின் அரசுத் தலைவர்
1991–2002
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya