பிரேவ் உலாவி
பிரேவ் (Brave) என்பது கட்டற்ற, திறமூல உலாவிகளில் ஒன்றாகும். இதனை பிரேவ் மென்பொருளகம் (Brave Software, Inc.) தயாரித்துள்ளது. இந்த உலாவிக்கு அடிப்படையாக குரோமியம் உலாவி திகழ்கிறது. தனிநபர் உரிமையை மிக அதிகமாகக் காக்கும் உலாவிகளில் தலையானது. அதாவது விளம்பரங்களை அனுமதிக்காத, நீங்கள் உலாவும் வலைப்பக்கங்களை மறைமுகாமாகக் கூட குறிப்பெடுக்காத உலாவியாகும். மேலும், உலாவும் இணையப்பக்கப் பங்களிப்பாளர்களுக்கு, ஆல்ட்காயின்களை அனுப்பும் திறன் கொண்டது. 2019 ஆம் ஆண்டு, மைக்ரோசாப்ட் விண்டோசு, மேக் இயக்குதளம், லினக்சு, ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ் ஆகியவைகளுக்கு இதன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பதிப்பின் சிறப்பியல்பாக இயல்புநிலை வலை தேடு பொறி , டக்டக்கோ (தேடுபொறி) என்பதைக் கூறலாம்.[3] லினக்சு வகை இயக்குதளங்களில் நிறுவிக் கொள்ளவும் விரிவானக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia