பிர்ச் ஒடுக்கவினை
கரிம வேதியியலில் பிர்ச் ஒடுக்கவினை (Birch reduction) என்பது அரீன்களை வளையயெக்சாடையீன்களாக மாற்றப் பயன்படும் ஒரு கரிம வினை ஆகும். இந்த வினையை, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டைசன் பெரின்சு ஆய்வகத்தில் பணிபுரிந்த ஆத்திரேலிய வேதியியலாளரான ஆர்தர் பிர்ச் (1915-1995) என்பவர் கண்டறிந்து அறிவித்தார்.[1] இந்தக் கண்டுபிடிப்பானது 1937 ஆம் ஆண்டுகளில் ஊசுட்டர், காட்ஃப்ரே என்பவர்களால் செய்யப்பட்ட முந்தைய அடிப்படைகளின் மீது அமைந்ததாகும்.[2] இது கார உலோகத்துடனும் (வழக்கமாக சோடியம்) ஒரு புரோட்டான் மூலத்துடனும் (வழக்கமாக மதுசாரம்), ஒரு அமீன் கரைப்பானில் (வழக்கமாக திரவ அமோனியா) உள்ள அரோமாட்டிக்கு வளையங்களின் கரிம ஆக்சிசனேற்ற வினை ஆகும். வினைவேக மாற்ற ஐதரசனேற்றம் போலல்லாமல், பிர்ச் ஒடுக்க-ஏற்ற வினை அரோமாட்டிக்கு வளையத்தை வளையஎக்சேன் வரை குறைக்காது. எடுத்துக்காட்டு: அமோனியா மற்றும் எத்தனாலில் நாப்தலீனின் ஒடுக்கம்: மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia