பிற்காலப் பாண்டி நாடு

சங்க காலத்திலும், இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது. 13ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய நாடு சிதருண்டு கிடந்த நிலையில் தமிழையும் வளர்த்தது. இதுபற்றிய சில குறிப்புகள்

மதுரைப் பாண்டியர்

  • 1279 – சோழநாடு மூன்றாம் இராசேந்திரனுக்குப் பிறகு அரசமரபு இல்லாது போயிற்று.
  • 1251 – 1271 - முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன், மூன்றாம் இராசேந்திரனை வென்றான். சோழனுக்குத் துணைநின்ற கண்ணனூர் போசளதையும் வென்றான்.
  • 1268 - 1310 – முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் படைத்தலைவன் ‘ஆரிய சக்கரவர்த்தி’ என்பவன் இலங்கை மன்னனை வென்று அங்குப் பாதுகாக்கப்பட்டிருந்த புத்தர் பல்லைக் கைப்பற்றிக் கொண்டு தமிழகம் திரும்பினான். அப்போதைய இலங்கை அரசன் பராக்கிரம பாகு பாண்டியனோடு நட்பு கொண்டாடிப் புத்தர் பல்லைத் தன் நாட்டுக்கு மீட்டுக்கொண்டான்.
    • குலசேகர பாண்டியனின் மக்கள் இருவர். பட்டத்தரசி மகன் சுந்தர பாண்டியன். காமக்கிழத்தியின் மகன் வீரபாண்டியன்
  • 1296 – குலசேகர பாண்டியன், வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான்.
  • 1310 – சுந்தர பாண்டியன், தன் தந்தையைக் கொன்று அரசனானான்.
    • அரசு நிலைக்கவில்லை. அடுத்த போரில் வீரபாண்டியன் வென்று நாட்டைத் தனதாக்கிக்கொண்டான்.

மதுரையில் முகமதியர்

  • (டில்லி அரசன் அல்லாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிகாபூர் அப்போது தென்னாடு வந்திருந்தான்.)
  • சுந்தர பாண்டியன் கில்ஜி துணையுடன் வந்து வீரபாண்டியனை அழித்தான். கில்ஜி பின்னர் சுந்தர பாண்டியனையும் அழித்தான்.
  • 1330 -1378 – மதுரையில் முகமதியர் ஆட்சி

சிதைந்த பாண்டியர்

  • கொற்கை, கருவை, தென்காசி – ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவர்கள் தம்மைப் ‘பாண்டியர்’ எனக் கூறிக்கொண்டனர்.
  • 1411 – 1463 – அரிகேசரி பராக்கிரம பாண்டியன் . தமிழைப் போற்றினான். தென்காசி விசுவநாதர் கோயிலும் சிற்பங்களும் இவனால் நிறுமானிக்கப்பட்டவை.
  • அடுத்து ஆங்காங்கே பாண்டியர் ஆட்சி
  • அபிராம பராக்கிரம பாண்டியன்
  • 1543 – 1588 – சடைய வர்மன் பராக்கிரம குலசேகரன், தலைநகர் கருவை, அபிராம பராக்கிரம பாண்டியனின் மகன்
  • 1552 – 1564 – நெல்வேலிப் பெருமாள் என்னும் நெல்வேலி மாறன், தலைநகர் தென்காசி, அபிராம பராக்கிரம பாண்டியனின் வளர்ப்பு மகன்

தமிழ் பாடிய பாண்டியர்

  • இவர்கள் மூவரும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் வழி வந்தவர்கள்.
ஆண்டு தலைநகர் பாண்டியர் நூல்கள் குரு
1560 -1600 கருவையும் பின் தென்காசியும் (முடி சூடவில்லை) வரகுணராமன் வாயு சங்கிதை, இலிங்க புராணம் முதலானவை அகோர சிவம் சுவாமி தேவர் (குலசேகர பாண்டியன் எனவும் கூறுவர்)
1588 – 1613(?) கருவை வரதுங்கராமன் பிரமோத்திர காண்டம், கருவை அந்தாதிகள், கொக்கோகம் வேம்பத்தூர் ஈசான முனிவர்
1564 - 1610 தென்காசி சீவலராமன் என்னும் அதிவீரராமன் நைடதம், காசி கண்டம், கூர்ம புராணம், வெற்றிவேற்கை சுவாமிதேவர்

இவற்றையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya