பிளாட்டினம் பெண்டாபுளோரைடு
பிளாட்டினம் பெண்டாபுளோரைடு (Platinum pentafluoride) என்பது PtF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிவப்பு நிறத்தில் காணப்படும் இத்திண்மம் அரிதாகவே ஆராயப்படுகிறது என்றாலும் பிளாட்டினம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்த பிளாட்டினத்தின் இரும புளோரைடுகளில் ஒன்று என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. தண்ணீரில் இச்சேர்மம் நீராற்பகுப்பு அடைகிறது. பிளாட்டினம் டைகுளோரைடை 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரினேற்றம் செய்து நீல் பார்ட்லெட்டு முதன்முதலில் பிளாட்டினம் பெண்டாபுளோரைடு தயாரித்தார். இதற்குக் குறைவான வெப்பநிலை எனில் பிளாட்டினம் டெட்ராபுளோரைடுதான் உருவாகும் [1]. ருத்தேனியம் பெண்டாபுளோரைடின் கட்டமைப்பைப் போன்று நாற்படி அதாவது நான்கு ஒருமங்கள் இணைந்த கட்டமைப்பை பிளாட்டினம் பெண்டாபுளோரைடும் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஒருமத்திலும் பிளாட்டினம் இரண்டு புளோரைடு ஈந்தணைவி பாலங்களுடன் எண்முக மூலக்கூற்று வடிவம் கொண்டுள்ளது மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia