பி. இராஜகோபால் (தொழிலதிபர்)
பி. இராஜகோபால் (P. Rajagopal, ஆகத்து 5, 1947 - சூலை 18, 2019), இந்தியாவில் சென்னையில் உள்ள சரவண பவன் சங்கிலி உணவகங்களின் நிறுவனர் ஆவார். தமிழ்நாட்டில் ஒரு கிராமப்புற விவசாய குடும்பத்தில் பிறந்தார். குறைந்த அளவே கல்வி கற்றுள்ள இவர், ஒரு உலகளாவிய உணவக சங்கிலியைக் கட்டினார். பிற்கால வாழ்க்கையில், அவர் 2001 ஆம் ஆண்டு நடந்த கொலைக்குற்றத்திற்காக தண்டனை பெற்றார். மேலும் ஜூலை 2019 இல் ஆயுள் தண்டனை அனுபவிக்கத் தொடங்கினார். சிறையில் அடைக்கப்பட்ட பல நாட்களுக்குப் பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.[4] தொழில்இராஜகோபால் இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான புன்னையாடியில் பிறந்தார். அவரது தந்தை வெங்காய விற்பனையாளர்; அவரது தாயார் ஒரு இல்லத்தரசி ஆவார். 1973 இல், சென்னைக்கு வந்து ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு, இவர் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பொது அங்காடியை கே. கே. நகரில் தொடங்கினார். 1981 ஆம் ஆண்டில், தனது முதல் உணவகமான சரவண பவனை சென்னையில் திறந்தார்.[5] 2019 ஆம் ஆண்டளவில், அவரது நிறுவனம் 24 நாடுகளில் 127 உணவகங்களாக விரிவடைந்து, சுமார் 5,000 பேருக்கு வேலை வழங்கியது.[1] குற்றம்ஒரு ஜோதிடரின் ஆலோசனையின் பேரில், இவர் தனது ஊழியர்களில் ஒருவரின் மகள் ஜீவஜோதியை தனது மூன்றாவது மனைவியாக அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே திருமணமானவர். அவர், இராஜகோபாலை நிராகரித்தார். அதனால், இராஜகோபால் ஜீவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள், அடிதடிகள் மற்றும் பேயோட்டுதல் ஆகியவற்றை திட்டமிட்டார். 2001 ஆம் ஆண்டில், ஒரு கொலை முயற்சிக்குப் பிறகு, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் கொலைக்கு வெற்றிகரமாக திட்டமிட்டார். இந்தக் கொலைக்காக, இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[6][7][8] கொலைக்கு ஆயுள் தண்டனை2001 ல் ஊழியர் சாந்தகுமார் கொலை மற்றும் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியை பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு உட்படுத்தியதற்காக, 2009 ஆம் ஆண்டில், நிறுவனர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதன் பிறகு, சரவண பவன் உணவக சங்கிலியின் பிராண்ட் மதிப்பு சரிந்தது.[9] ஜீவஜோதி அவரது உதவி மேலாளர்களில் ஒருவரின் மகள் ஆவார். இராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவள் ஏற்கனவே சாந்தகுமாரை மணந்தவர். அதனால், சாந்தகுமார் கடத்தப்பட்டு அவரது உடல் சில நாட்களுக்கு பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு சுற்றுலா நகரத்தில் உள்ள பயணியர் தங்குமிடத்தில், கழுத்தை நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.[10][11] இராஜகோபால் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், அவரது சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி, கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதிசெய்து ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.[12] உச்சநீதிமன்றம் உறுதிஇராஜகோபாலின் கொலை தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை இந்திய உச்ச நீதிமன்றம் 2019 மார்ச் 29 அன்று உறுதி செய்தது.[6] உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அவர் ஜூலை 7, 2019 க்குள் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டியிருக்கும். மேலும் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.[7] இராஜகோபால், ஜூலை 9, 2019 அன்று அதிகாரிகளிடம் சரணடைந்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனை நீட்டிக்குமாறு அவரது ஆலோசகர் கெஞ்சினாலும், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அதிபருக்கு "உடனடியாக சரணடைய" உத்தரவிட்டது. இராஜகோபால் சரணடைவதிலிருந்து விலக்கு கோரினார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கம்பிகளுக்குப் பின்னால் செலவழித்த நேரமாக கருத வேண்டும் என்று கெஞ்சினார். இதை நீதிமன்றம் நிராகரித்தது. இறப்புதனது ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக, ஜூலை 9, 2019 அன்று சரணடைந்த பின்னர், இராஜகோபாலுக்கு ஜூலை13, 2019 அன்று மாரடைப்பு ஏற்பட்டது.[13] இசுடான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறை வார்டில் இருந்து சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அங்கு இவர் ஜூலை 18, 2019 அன்று காலை காலமானார்.[4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia