பி. ஜெயதேவிபி. ஜெயதேவி (P. Jayadevi, (இறப்பு 4 அக்டோபர் 2023)) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜெயதேவி, 1980கள் மற்றும் 1990களில் முக்கியமாக பணிபுரிந்துள்ளார்.[1][2][3] பணிநாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 20 வயதில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்தார். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக பணிபுரிந்து 15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். மேலும் பி. சி. ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களைத் தனது முயற்சிகள் மூலம் அறிமுகப்படுத்தினார்.[4] ஜெயதேவி முதலில் நலம் நலமறிய ஆவல் (1984) திரைப்படத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார். பின்னர் 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் அதிக திரைப்படங்களை இயக்கினார்.[4] 2000ஆம் ஆண்டில், புரட்சிக்காரன் என்ற படத்தில் எழுத்தாளராகப் பணியாற்றினார். படத்தின் சர்ச்சைக்குரிய கருப்பொருள் வெளியீட்டிற்கு முன்பே விளம்பரத்தை ஏற்படுத்தியது. படத்தின் வசனங்களில் ஜெயதேவியின் பணி பாராட்டப்பட்டது.[4][5] இவர் 2001-ல் பவர் ஆப் உமன் (2005) திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார். ஆனால் தயாரிப்பு சிக்கலைத் தொடர்ந்து படம் தாமதமாக வெளியிடப்பட்டது.[6] இத்திரைப்படத்தில் ஹரிஹரன் மற்றும் குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆல்இந்தியன்சைட்டின் ஒரு விமர்சகர் படத்தை "சராசரிக்கும் குறைவானது" என்று விமர்சனம் செய்தார். "ஜெயதேவியின் கதை ஆரம்பத்தில் வலுவானது" என்று குறிப்பிட்டார். ஆனால் "கடைசி சில காட்சிகள் மன்னிக்க முடியாத அளவுக்கு மெதுவாகவும் செயற்கையாகவும் இருந்தன" எனத் தெரிவித்திருந்தார்.[7] 2010ஆம் ஆண்டில், ஜெயதேவி ஆனந்த லீலை, போலி தெய்வங்கள் மற்றும் அவர்களின் பெண் பக்தர்களைப் பற்றிய ஒரு திரைப்படத்தின் பணிகளைத் செய்யத் தொடங்கினார். அவர் முக்கிய வேடங்களில் நடிக்க குஷ்பூ மற்றும் சுஹாசினியை அணுகினார், ஆனால் அந்த திட்டம் தயாரிப்பாக உருவாகவில்லை.[8][9] 2018 இல் ஒரு திரைப்படத்தை இயக்கும் தனது விருப்பத்தை அவர் அறிவித்தார் [10] தனிப்பட்ட வாழ்க்கைஜெயதேவி முன்பு திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனை திருமணம் செய்து கொண்டார்.[11] இவர் 4 அக்டோபர் 2023 அன்று தன் 65 ஆவது வயதில் இறந்தார்.[12] படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia