பீட்டர் ராபிட் (திரைப்படம்)
பீட்டர் ராபிட் (Peter Rabbit) என்பது 2018 ஆம் ஆண்டிய 3 டி லைவ்-ஆக்சன் / கம்ப்யூட்டர்-அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும், இது பீட்ரிக்ஸ் பாட்டர் என்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர் எழுதிய தி டெல் ஆப் பீட்டர் ராபிட் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ராப் லைபர் மற்றும் கிளக் இணந்து எழுதிய கதையை கிளக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜேம்ஸ் கோர்டன், முதன்மை பாத்திரத்துக்கு குரல் பின்னணி குரங் கொடுத்தும் ரோஸ் பைர்ன், டோம்ஹால் க்ளீசன், சாம் நீல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிற பாத்திரங்களுக்கு டெய்ஸி ரிட்லி, எலிசபெத் டெபிக்கி, மார்கோட் ரொப்பி ஆகியோர் முயல் கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இது ஆஸ்திரேலிய அமெரிக்கக் கூட்டு தயாரிப்பு ஆகும். இந்த படம் 2018 பெப்ரவரி 9, அன்று வெளியிடப்பட்டு, உலகளவில் 1 351 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்தது. இதன் அடுத்த பகுதியான பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே 2020 ஆகத்து 7, அன்று வெளியிடப்பட உள்ளது. கதைச்சுருக்கம்முயல்களின் பாரம்பரிய வாழிட வனப்பகுதியில் ஜோ என்னும் பெரியவர் விவசாயிம் செய்கிறார். இதற்கு எதிராக முயல்களின் தலைவனாக பீட்டர் தலைமையிலான முயல்கள் அட்டகாசம் செய்கின்றன. பெரியவர் ஜோவின் உறவினரான தாமஸ் என்ற இளைஞன் தோட்டத்தின் பொறுப்பை ஏற்கிறான். இதன்பிறகு முயல்களை கடுமையாக தாமஸ் ஒடுக்குகிறான். இதற்கிடையில் முயல்களுக்கு நட்பான பியா என்னும் பெண்ணுடன் தமஸ் நெருக்கம் காட்டுகிறான். இவர்களின் நெருக்கத்தைப் பிரிக்க தாமஸ் முயலும் அதன் தோழர்களும் முயல்கின்றனர். இந்த முயல்களுக்கு ஜோவும் பதிலடி தருகிறான். இந்தக் களோபரங்களே படத்தின் கதை. குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia