புதிர்நீலன்
புதிர்நீலன் (Rathinda amor) என்பது நீலன்கள் குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சி ஆகும். பரவல்புதிர்நீலன் இலங்கை மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது.[1][2][3] தோற்றம்அளவு 26 மிமீ - 28 மிமீ ஆண், பெண் பூச்சிகளின் கரும் பழுப்பு முன் இறக்கைகளின் மேல்புறத்தில் சிறிய வெள்ளை திட்டும், பின் இறக்கைகளின் நுனியில் கருஞ்சிவப்புத் திட்டுகளும் காணப்படும். இறக்கைகளின் கீழ்பகுதியில் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும். முன் இறக்கைகளின் கீழ்ப்புறத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் சூழ்ந்த, ஒரு நீண்டு வளைந்த வெண்திட்டு காணப்படும். நுனியில் வெள்ளை மற்றும் கருங்கீற்றுகள் கோடுபோல் காணப்படும். இறக்கைகளில் பல சிறிய அலை போன்ற கருந்திட்டுகளும், நுனியில் வெள்ளை நிறக்கோடும், விளிம்பில் மூன்று சிறிய வால்களும் காணப்படும், நடுவால் நீண்டு இருக்கும். வாழிடச்சூழல்இலையுதிர் காடுகள், மழை அதிகமுள்ள சமவெளிகள் போன்றவற்றில் காணப்படும் விட்டுவிட்டுச் சிறகடித்து மெதுவாகப் பறக்கும். கீழ்மட்டத்திலுள்ள செடிகளைச் சுற்றியே பறக்கும் இலைகளின் மேல் அமர்ந்தவுடன் வால்களை ஆட்டியும், உடலை முன்னும்பின்னும் சுற்றியும், தலை எது, வால் எது என்று தொpயாத அளவுக்குத் தந்திரமாக எதிராளியிடமிருந்து தற்காத்துக்கொள்ளும். இது ஒரு புதிரான செயலாகும். வாழ்க்கைப்பருவங்கள்புழப் பருவத்தில் புழுவின் முகம் பார்பதற்குக் குரங்கு முகத்தைப் போல் இருக்கும். இலைகளின் மேல் அமர்ந்து வெயில் காயும். புழுக்களுக்கு உணவாகும் சில தாவரங்கள்
வாழ்க்கை சுற்சி
இவற்றையும் பார்க்கவும்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia