புதுவைப் பல்கலைக்கழகம்
புதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் (central university) ஒன்றாகும்[1]. 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் PU என்று பரவலாக அழைக்க படுகிறது[2]. இது 13 இயற்புலன்களை (schools) உடையது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேரா.குருமித் சிங் துணைவேந்தராகவும் இருக்கிறார்கள். ![]()
ஐந்தாண்டு – ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள்புதுவை பல்கலை கழகத்தில் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியல், புவியியல், கணிதம், புள்ளியியல், கணிப்பொறி அறிவியல் மற்றும் சமூகம்-பொருளாதார நிர்வாகம்-சட்டம், ஆகிய பாட பிரிவுகளில் ஐந்தாண்டு – ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள் வழங்க படுகின்றன.[3] புதுவைப் பல்கலைக்கழகப் பண்[4]புதுவைப் பல்கலைக்கழகப் பண், இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, திரு.பழனி பாரதி, பேரா. பாலசுப்பிரமணியன் மற்றும் பேரா. குணசேகரன் என்பவர்களால் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் இசையமைப்பாளர் திரு. ஆர். பரத்வாஜ் ஆவார். மின்னணு தொடர்புத்துறை இயற்புலத்தால் (Center for Electronic Media) காணொளி வடிவில் வெளியிடப்பட்டது. தமசோமா ஜோதிர்கமய[5] ஒளிபரவ, ஒளிபரவ புதுவை புதுவை புதுவையே போற்றுவோம் வங்கக் கடலலை தாலாட்டும் அறிவின் தாகம் தணியும் சோலை பாரதித் தமிழால் நனைத்த இடம் - எங்கள் ஆ அ ஆ அ ஆ........(2) அறிவின் தாகம் தணியும் சோலை பல்கலைக் கழகம் என்றும் வளர்ந்திட புதுவையே புதுமையே போற்றிடும் பல்கலைக் கழகமே புதுவை புதுவை புதுவையே போற்றுவோம் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia