புத்துல் குமாரிபுத்துல் குமாரி (Putul Kumari, பிறப்பு: நவம்பர் 16, 1958) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பேங்காவில் நடந்த மக்களவைத் தேர்தலில் இருமுறை தோல்வியடைந்துள்ளார். இதில் 2019இல் நடைபெற்ற தேர்தலும் அடங்கும்.[1][2] 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பேங்கா மக்களைப் பொதுத் தேர்தலில் இவரது கணவர் திக் விசய் சிங் வெற்றி பெற்றார். ஆனால் 2010இல் இவரது கணவர் இறந்த பின்னர், நடந்த இடைத்தேர்தலில், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிப்பட்ட வாழ்க்கைபுத்துல் குமாரிக்கு மான்சி சிங் மற்றும் சிரேயாசி சிங் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இவரது இளைய மகள். சிரேயாசி சிங் பன்னாட்டு அளவிலான பொறி சுடும் (trap shooter) வீரரும் அரசியல்வாதியும் ஆவார்.[3] டெல்லியில் நடைபெற்ற 2010 காமன்வெல்த் போட்டியில் சிரேயாசி சிங் 4வது இடத்தைப் பிடித்ததுடன், 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.[4] குழந்தைப் பருவமும் கல்வியும்பாட்னா (பீகார்) பாலி நகரில் 1958 நவம்பர் 16ஆம் தேதி மறைந்த தந்ஜங் பகதூர் சிங் மற்றும் லல்காரி தேவி ஆகியோருக்குப் மகளாகப் புத்துல் குமாரி பிறந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலை இந்தி முடித்தார்.[5] அரசியல் வாழ்க்கைஇவர் முதல் முறையாக மக்களவையில் நுழைவதற்கு 2010 இல் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[6] இவர் நவம்பர் 26, 2010 அன்று பதவியேற்றார்.[7] தனது முதல் உரையில், மார்ச் 2011 இல் ரயில்வே பட்ஜெட்டின் போது, பின்தங்கிய பகுதியான தனது தொகுதிக்களுக்கும் இரயில் பாதைகளைக் கேட்டார். இந்தக் குடும்பம் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பில் உள்ளது. திக்விஜய் சிங் மற்றும் புத்துல் குமாரி இருவரும் பேங்காவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகவும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்டனர். சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள்குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதில் இவர் மிகவும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஸ்வஸ்தாய மேளாஸ் என்ற பெயரில் இவர் சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்தார். இவர் அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு திருமணங்கள் செய்து வைத்தல், அறக்கட்டளைகள் சார்பில் மருத்துவமனைகளை நிறுவுதல் / செயல்படுத்துதல் ஆகியவற்றிலும் ஈடுபட்டார். கிதாவ்ர் அறக்கட்டளையை நிறுவி அந்த அறக்கட்டளையின் ஆண்டுவிழா கிதாவ்ர் மகோத்சவா என்ற பெயரில் துர்கா பூஜையின் போது கொண்டாடப்பட்டது. ஆர்வங்கள்இவர் ரெய்கி முறையை மூன்றாம் நிலை வரை முடித்து தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணி புரிந்தார். இவர் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வமுள்ளவர் ஆவார். இவர் தேசிய துப்பாக்கி சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்; யோகா பயிற்சி மற்றும் யோகா அமர்வுகளை ஏற்பாடு செய்வதை இவர் விருப்பத்தோடு செய்துள்ளார். இவருக்குப் பிடித்த பொழுது போக்குகள் மத இலக்கியங்கள் (ஓஷோ மற்றும் சுவாமி சத்யானந்த்) மற்றும் புனைகதைகளைப் படித்தல்; தோட்டக்கலை, பக்தி இசை, உள்புற வடிவமைப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia