புத்தூர் நடவடிக்கை
புத்தூர் நடவடிக்கை (Operation Puttur) என்பது தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறை ஆகியவை இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். 2013 அக்டோபர் 5 அன்று புத்தூரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கும் இரண்டு நபர்களைப் பிடித்தனர். தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற கோயிலான திருமலை வெங்கடவன் ஆலயத்தில் குண்டுகள் வைக்க திட்டமிட்டிருந்தனர். சந்தேகப்படும் நபர்கள் "முஸ்லீம் பாதுகாப்பு படை" என்ற பெயரில் சென்னையில் புகழ்பெற்ற ஒரு நபரை கொலை செய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். இந்த நடவடிக்கையினால் அந்தச் சதித்திட்டங்கள் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னணி![]() அல் உம்மா என்பது தமிழகத்தில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாத குழு ஆகும். இந்த இயக்கமானது பாபர் மசூதி இடிப்பு நிகழ்விற்குப் பின் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 1993 ஆண்டு சென்னையில் ஆர். எஸ். எஸ் அலுவலகத்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்த்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு அல் உம்மா இயக்கம் கோயமுத்தூர் குண்டு வெடிப்புகள் போன்ற மற்ற தாக்குதல்களில் 58 பேரைக் கொன்றதுடன் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எல்.கே அத்வானியைக் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொலை செய்ய திட்டமிட்டனர்.[2][3] மேலும் 2013 ஆம் ஆண்டு கருநாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்த தீவிரவாதக் குண்டு வெடிப்புச் செயலிலும் இவ்வியக்கம் தொடர்பு கொண்டிருந்தது.[4] ஆண்டுதோறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நடக்கும் பிரம்மோர்சவம் என்னும் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் மத்தியில் கொண்டுவரப்படும் குடை குண்டுகள் மூலம் கோயிலைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். இந்திலையில் 2013 அக்டோபர் 4 அன்று சென்னையில் பகுருதீன் (போலீஸ் பக்ருதீன் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவரை கைதுசெய்தனர். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எல்.கே அத்வானியைக் 2011 அக்டோபரில் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன், சேலம் தணிக்கையாளர் வி. ரமேஷ் ஆகியோரை கொன்றதாக போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கவல்துறையினர் சந்தேகப்பட்டனர். பக்ருதின், பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சேர்ந்து "முஸ்லீம் பாதுகாப்பு படை" என்ற பெயரில் சென்னையில் புகழ்பெற்ற ஒரு நபரை 2013 ஆண்டு கொலை செய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். தமிழ்நாடு காவல்துறை பக்ருதினின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. 2013 அக்டோபர் 4 அன்று சென்னை தொடர் வண்டி நிலையத்துக்கு வந்தவரை சாதாரண உடையில் பின்தொடர்ந்து வந்த காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். நடவடிக்கைதிருப்பதியில் இருந்து 30 கி.மீ. (19 மைல்), தொலைவிலும், சென்னையிலிருந்து 115 கிமீ (71 மைல்) தொலைவிலும் உள்ள புத்தூருக்கு 2013 அக்டோபர் 4,அன்று மாலை தமிழ்நாடு காவல் துறையினர் சென்று சேர்ந்தனர். 2013 அக்டோபர் 5 ஆம் நாள், புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் இருந்தனர்; அதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னையில் பகுருதீன் (போலீஸ் பக்ருதீன் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவரை கைதுசெய்தனர். அவரிடம் இருந்து பெற்ற தகவலின் பேரில் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் உள்ள இடம் காவல் துறைக்குத் தெரியவந்தது. இந்த மூவரும் தடைசெய்யப்பட்ட அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்தவர்கள் ஆவர். இவர்கள் புகழ்பெற்ற கோயிலான திருமலை வெங்கடவன் ஆலயத்தில் குண்டுகள் வைக்க திட்டமிட்டிருந்தனர். சந்தேகப்படும் நபர்கள் "முஸ்லீம் பாதுகாப்பு படை" என்ற பெயரில் சென்னையில் புகழ்பெற்ற ஒரு நபரை கொலை செய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். இவர்கள் இதற்குமுன் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த லால் கிருஷ்ண அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்டவர்களாகவும் மற்றும் பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குண்டு வைத்து 16 பேர் காயமடைய காரணமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது. காலை 4 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கை 10 மணி நேரம் தொடர்ந்தது. இந்த நடவடிக்கையின்போது காவலர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்தார்; அங்கு இருந்த நான்கு தீவிரவாதிகளில் இருவரான மாலிக் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவர் இறுதியில் பிடிபட்டனர். மாலிக்கின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை 10 மணிநேரம் நீடித்தது. தீவிரவாதிகளைப் பிடிக்க தமிழக சிறப்புப் புலனாய்வு காவலர்கள் புத்தூர் வந்து, தீவிரவாதிகள் தப்பிவிடாமல் இருக்க துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்பும் மாறிமாறி சுட்டுக்கொண்டனர். இச்சம்பவத்தின்போது அங்கிருந்த ஒரு துப்பாக்கி, 2 வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தீவிரவாதிகள் இருந்த வீட்டுக்குள் அவர்களைப் பிடிக்க காவலர்கள் புகுந்தனர். அப்போது புலனாய்வுப்பிரிவு ஆய்வாளர் இலட்சுமனன் மற்றும் காவலர் இரமேஷ் ஆகியோரை தீவிரவாதிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் போலீசாரை வெளியே தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டனர்.[5] இதனையடுத்து திருப்பதியில் இருந்து ஆக்டோபஸ் கமாண்டோ படையும், ஆயுதப்படையும் வரவழைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அதிகாலை அந்தத் தெருக்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றினர். உள்ளே இருப்பவர்களை வெளியேற்ற வீட்டின் மாடியில் துளையிட்டு, கண்ணீர் புகை குண்டை வீட்டுக்குள் வீசினர். வீட்டில் புகை சூழ்ந்ததால் உள்ளே இருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் பன்னா மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் என தெரியவந்தது.[6] அவர்களிடம் உள்ளே இருப்பவர்கள் குறித்த தகவல்கள் காவல்துறையினரால் திரட்டப்பட்டன. இதன்பின்னர் அதிரடிப் படையினர் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தாங்கள் சரண் அடைவதாக அறிவித்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது பன்னா இஸ்மாயில் குண்டு காயமுற்றிருந்தார்.[7] மற்ற இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டனர்.[8] என்றாலும் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் பிடபட்டதையடுத்து இந்த புத்தூர் நடவடிகைக முடிவுற்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia