புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில்
நயினார் யோகீசுவரமுடையார் கோயில் (ஆங்கிலம்: Nainar Yogeeswaramudaiyar Temple) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியின் புத்தேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரால் பூசை வழிபாட்டு நெறிமுறைகள் கையாளப்படும் ஒரு சமுதாயக் கோயில் ஆகும். இந்து வெள்ளாளர் சமுதாய மரபினரால் பூசைகள் செய்யப்படுகின்றன. நயினார் யோகீசுவரமுடையார் சன்னதி, பூலோவுடைய கண்டன் சாஸ்தா சன்னதி, பூதத்தான் சன்னதி ஆகியவை இக்கோயிலின் வழிபாட்டுக்குரிய இடங்களாகும்.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 72 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நயினார் யோகீசுவரமுடையார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°12′53″N 77°25′57″E / 8.2146°N 77.4324°E ஆகும். இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia