புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
தூத்துக்குடி புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி (St. Xavier's Higher Secondary School, Thoothukudi) மதுரை மாகாண சேசு சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி 1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இப்பள்ளியின் பெயரானது சேசு திருச்சபையைச் சேர்ந்த சமயப்பரப்பாளர் புனித பிரான்சிசு சேவியர் என்பவரின் இந்திய வருகையை நினைவுபடுத்தும் விதத்தில் இடப்பட்டது. இந்தப் பள்ளி தூத்துக்குடியின் ஆங்கில உச்சரிப்புப் பெயரான டூட்டிகொரின் என்ற பெயருடன் சேர்த்தும் அடையாளப்படுத்தப்படுகிறது. வரலாறு1920 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியானது பெரும்பான்மையான கத்தோலிக்க மாணவர்களை உள்ளடக்கி 563 மாணவர்களுடன் செயல்பட்டது.[2] இது அந்தக் காலகட்டத்தில் மற்ற கத்தோலிக்கப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது ஒரு மாறுபட்ட நிலையாகும்.[3] துாத்துக்குடியில் உள்ள சேவியர் நிறுவனமானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின்படி 1960 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.[4] இந்தப் பள்ளி செயல்பாடு மிக்க ஒரு பழைய மாணவர் சங்கத்தைக் கொண்டுள்ளது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia