புரோக்சிமா செண்ட்டாரி பி (Proxima Centauri b ) அல்லது புரோக்சிமா பி (Proxima b [ 4] [ 5] ) என்பது நமது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற செங்குறு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும்.[ 6] [ 7] இது புவியில் இருந்து கிட்டத்தட்ட 4.2 ஒளியாண்டுகள் (1.3 புடைநொடிகள் , 40 திரில்லியன் கி.மீ. , அல்லது 25 திரில்லியன் மைல்கள்) தொலைவில் செண்ட்டாரசு விண்மீன் தொகுதியில் காணப்படுகிறது. இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் இதுவே நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் உள்ள புறக்கோளும் ஆகும்.[ 1]
2016 ஆகத்து மாதத்தில், ஐரோப்பிய சதர்ன் வான்காணகம் இக்கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது.[ 1] [ 6] [ 8] [ 9] [ 10] "அடுத்த சில நூற்றாண்டுகளில்" இக்கோளுக்கு தானியங்கி விண்ணாய்வுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[ 6] [ 7] ஆரைத்திசைவேக முறை மூலம், விண்மீனின் நிறமாலை வரிகளின் சுழற்சிமுறை டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாய்வுகளின் படி, புவு குறித்தான இப்புறக்கோளின் வேகத்தின் கூறு கிட்டத்தட்ட 5 கி.மீ. /ம ஆகும்.[ 1]
மேற்கோள்கள்
↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Anglada-Escudé, G.; Amado, P. J.; Barnes, J.; Berdiñas, Z. M.; Butler, R. P.; Coleman, G. A. L.; de la Cueva, I.; Dreizler, S. et al . (25 ஆகத்து 2016). "A terrestrial planet candidate in a temperate orbit around Proxima Centauri" (in en). Nature 536 (7617): 437–440. doi :10.1038/nature19106 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0028-0836 . http://www.eso.org/public/archives/releases/sciencepapers/eso1629/eso1629a.pdf .
↑ Torres, C. A. O.; Quast, G. R.; Da Silva, L.; De La Reza, R.; Melo, C. H. F.; Sterzik, M. (December 2006). "Search for associations containing young stars (SACY). I. Sample and searching method". Astronomy and Astrophysics 460 (3): 695–708. doi :10.1051/0004-6361:20065602 . Bibcode: 2006A&A...460..695T .
↑ A Potentially Habitable World in Our Nearest Star பரணிடப்பட்டது 2019-05-02 at the வந்தவழி இயந்திரம் . Planetary Habitability Laboratory . 24 ஆகத்து 2016.
↑ "Earth-like planet discovered orbiting sun's neighbor" . CNN. 24 August 2016. Retrieved 24 ஆகத்து 2016 . A planet named Proxima b has been discovered orbiting the closest star to our sun.
↑ Davis, Nicola (24 ஆகத்து 2016). "Discovery of potentially Earth-like planet Proxima b raises hopes for life" . தி கார்டியன் . Retrieved 24 ஆகத்து 2016 .
↑ 6.0 6.1 6.2 Chang, Kenneth (24 ஆகத்து 2016). "One Star Over, a Planet That Might Be Another Earth" . த நியூயார்க் டைம்ஸ் . http://www.nytimes.com/2016/08/25/science/earth-planet-proxima-centauri.html . பார்த்த நாள்: 24 ஆகத்து 2016 .
↑ 7.0 7.1 Strickland, Ashley (24 ஆகத்து 2016). "Closest potentially habitable planet to our solar system found" . CNN Health . Retrieved 25 ஆகத்து 2016 .
↑ "Planet Found in Habitable Zone Around Nearest Star" . European Southern Observatory. 24 ஆகத்து 2016.
↑ " "Found! Potentially Earth-Like Planet at Proxima Centauri Is Closest Ever " " . Space.com. 24 August 2016.
↑ {{cite web|last1=Knapton|first1=Sarah|title=Proxima b: Alien life could exist on 'second Earth' found orbiting our nearest star in Alpha Centauri system|url=http://www.telegraph.co.uk/science/2016/08/24/proxima-b-alien-life-could-exist-on-second-earth-found-orbiting/%7Cwebsite= [[த டெயிலி டெலிகிராப்|publisher=Telegraph Media Group|accessdate=24 ஆகத்து 2016|date=24 ஆகத்து 2016}}
வெளி இணைப்புகள்