புளோரோமீத்தேன்
புளோரோமீத்தேன் (Fluoromethane) என்பது CH3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் புளோரைடு, பிரியான் 41, ஆலோகார்பன்-41, எச்.எப்.சி-41 என்ற பல பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் புளோரோமீத்தேனை திரவமாக்க முடியும். நச்சுத்தன்மையில்லாமலும் எளிதில் தீப்பற்றும் வாயுவாகவும் இது காணப்படுகிறது. கார்பன், ஐதரசன் , புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து புளோரோமீத்தேன் சேர்மம் உருவாகிறது. மீத்தேன் அமைப்பில் உள்ள ஒரு ஐதரசன் அணுவிற்குப் பதிலாக புளொரின் அணு இடம்பெற்றிருப்பதால் இதற்கு புளோரோமீத்தேன் எனப்பெயரிடப்பட்டது. ஐதரோகார்பன் குடும்பச் சேர்மங்களில் மிக எளிய சேர்மம் புளோரோமீத்தேன் ஆகும். மிகக் குறைந்த அணுநிறையைக் கொண்ட ஐதரோகார்பனும் இதுவேயாகும். ஏனெனில் இச்சேர்மத்தில் கார்பன், ஐதரசன், புளோரின் அணுக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குளோரோபுளோரோகார்பன்களுடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் இதில் குளோரின் அணு இல்லை. எனவே ஒசோன் அடுக்கிற்கு இவ்வாயுவால் எந்த கெடுதலும் இல்லை[2] குறைக்கடத்திகள், மின்னணு பொருட்கள் பெருமளவில் தயாரிக்கவும் இவ்வாயு பயன்படுகிறது. RF புலத்தின் முன்னிலையில் இது பிரிகையடைந்து புளோரின் அயனிகளைக் கொடுக்கிறது. சில சிலிக்கன் சேர்மங்கள் அரிக்கப்படுகின்றன. புளோரோமீத்தேன் ஈதர் போன்ற விரும்பத்தக்க மணமுடையது. அதிக அடர்த்தியில் இச்சேர்மம் ஒரு மயக்கமூட்டியாக்வும் செயல்படுகிறது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய புளோரோமீத்தேன் காற்ரில் எரிந்து நச்சுத்தன்மை மிக்க ஐதரசன் புளோரைடை வெளியிடுகிறது. ஆல்ககாலைப் போலவே இச்சேர்மத்தின் சுவாலையும் நிறமற்று எரிகிறது. C-F இணைப்பின் பிணைப்பு ஆற்றல் 552 கியூ/மோல் ஆகவும். இணைப்பின் பிணைப்பு நீளம் 0.139 நானோமீட்டர் (குறிப்பாக 0.14 நானோமீட்டர்) ஆகவும் உள்ளது. நான்முகி மூலக்கூற்று வடிவமுடையதாக உள்ள புளோரோமீத்தேன் . 25 °செல்சியசில் தன்வெப்ப ஏற்புத்திறன் Cp = 38.171 யூ.மோல்−1.கெ−1 என்ற அளவிலும் மாறுநிலை வெப்பம் 44.9 °செல்சியசு மற்றும் 6.280 மெகாபாசுகல் ஆகவும் பெற்றுள்ளது. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia