புஷ்ப மித்ர பார்கவா
புஷ்ப மித்ர பார்கவா (Pushpa Mittra Bhargava) ( 22 பெப்ரவரி 1928 – 1 ஆகத்து 2017) என்பவர் இந்திய அறிவியலாளர், எழுத்தாளர், நிர்வாகி ஆவார். மேலும் இவர் ஐதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனராவார். இவர் இந்தியாவில் அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை வலியுறுத்தவேண்டும் என்று வாதிட்டு வந்தார்.[1][2] நோபல் பரிசு வெல்லும் தகுதி உடைய ஒரு அறிவியலாளரைக்கூட இந்தியாவால், உருவாக்க முடியாமல் போனதற்கு, அறிவியல் சிந்தனை இல்லாமல் போனதே காரணம் என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பணிகள்உயிரி வேதியியலாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய பார்கவா, இந்தியாவில் உலகத் தரத்திலான உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நம்பினார். அவரின் முயற்சியால் 1977 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் தொடங்கப்பட்டது. ஓவியர் எம். எஃப். உசைனை அழைத்து, இந்த மையத்தில் சுவர் சித்திரத்தை வரையச் செய்தார். மேலும் 1986 ஆம் ஆண்டு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பத் துறை ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்த அமைப்புகள் மூலம், மக்களுக்குப் பயன்படும் விதத்தில், பல உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை, வணிக மயமாக்குவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார். என்றாலும், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வணிக மயமாக்கலில் இவருக்கு உடன்பாடில்லை. மரபணுப் பொறியியல் என்ற சொல்லைப் பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் இவர். இவரை ‘இந்திய நவீன உயிரியலின் வடிவமைப்பாளர்’ என்று போற்றுகின்றனர். போபால் விஷ வாயுக் கசிவினால் ஏற்பட்ட நீண்ட காலப் பாதிப்புகளை ஆய்வு செய்யப் பல மத்திய அறிவியல் அமைப்புகள் தயங்கியபோது, இவர் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார்.[3] மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு உறுப்பினராகஇந்தியாவில், மரபணு மாற்றப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பல விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மரபணு மாற்றம் சார்ந்த ஆய்வுகளை நெறிப்படுத்தும் அமைப்பான மத்திய அரசின் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (ஜி.இ.ஏ.சி.) உறுப்பினராக, 2008 ஆம் ஆண்டு புஷ்ப பார்கவாவை நியமித்தது. புஷ்ப பார்கவா நியமிக்கப்பட்ட பிறகு, மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பான உண்மைகள் பல வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. அதில் முக்கியமானது பி.டி. பருத்தியில் உள்ள நச்சுத்தன்மை தொடர்பான உண்மையை, ஜி.இ.ஏ.சி. குழு கண்டுகொள்ளவில்லை என்பது. பி.டி. பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு பி.டி. கத்திரிக்காயை அறிமுகப்படுத்துவதற்கான துவக்ககட்டப் பணிகள் நடைபெறத் தொடங்கின. அப்போது அந்தக் கத்திரிக்காயைப் பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அப்போது பார்கவா வழங்கிய சில வழிகாட்டுதல்களை ஜி.இ.ஏ.சி., ஏற்கவில்லை முதல் நிபுணர் குழு, மற்றும் இரண்டாம் நிபுணர் குழுகள் இந்தக் கத்திரிக்காய் பாதுகாப்பானது என்று சான்றளித்தது. உடனே, சூழலியல் செயல்பாட்டாளர்கள் பலர், "குழுவில் புஷ்ப பார்கவா இருந்துமா இப்படிபட்ட நிலை? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதற்கு பார்கவா பி.டி. கத்திரிக்காய் தொடர்பாக அவர்கள் காட்டும் பரிசோதனைகள் எல்லாம் மான்சாண்டோ மேற்கொண்டவை. ஆனால் அவை போதாது. இன்னும் கூடுதலாக 30 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. மான்சாண்டோ சொல்வதை எல்லாம் நம்பக் கூடாது. என்று ஊடகங்களில் எழுதவும் பேசவும் செய்தார். தொடர்ந்து, தனது கருத்துகளை ஒரு கடிதமாக அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு அனுப்பிவைத்தார். இதைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பி.டி. கத்திரிக்காய் அறிமுகத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.[4] அறிவியல் சிந்தனையாளராக
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia