புஷ்யமித்திர சுங்கன்
![]() புஷ்யமித்திர சுங்கன் (Pushyamitra Shunga) வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மௌரியப் பேரரசின் மன்னர் பிரகத்திர மௌரியனை கொன்று விட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் வட இந்தியாவில் சுங்கப் பேரரசை நிறுவி, கி மு 185 முதல் 149 முடிய சுங்கப் பேரரசை ஆண்ட பிராமண குல மன்னராவார்.[1] முன்னோர்கள்பல ஆதாரங்கள் புஷ்யமித்திர சுங்கன் ஒரு பிராமணர் என்றே கூறுகிறது. மேலும் 16-ஆம் நூற்றாண்டின் பௌத்த அறிஞரான தாரநாதர் வெளிப்படையாகவே சுங்கனை ஒரு பிராமண மன்னர் என்றே குறிப்பிடுகிறார்.[2] புஷ்யமித்திர சுங்கன் தந்தை வழி, தாய் வழியில், பாரத்துவாசர் மற்றும் விஸ்வாமித்திரர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பிறந்தவர் என புராணக் குறிப்புகளின் மூலம் அறியப்படுகிறது. [3][4][5] புராணங்கள், இறுதி மௌரியப் பேரரசன் ஆன பிரகத்திரனைக் கொன்று புஷ்யமித்திரசுங்கன் ஆட்சியை கைப்பற்றியதாக கூறுகிறது. ஆனால் திவ்வியவதனம் எனும் பௌத்த நூல், புஷ்யமித்திர சுங்கனை மௌரியப் பேரரசின் இறுதி மன்னர் என குறிப்பிடுகிறது. [2]. எச். சி. இராய் சௌத்திரியின் கூற்றின் படி, சுங்கா எனும் சமசுகிருத சொல்லிற்கு பெரிய மரம் என்று பொருள் உண்டு.[6] வாரிசுபுஷ்யமித்திர சுங்கனுக்குப் பின்னர் அவர்தம் மகன் அக்கினிமித்திரன் கி மு 148-இல் சுங்கப் பேரரசர் ஆனான்.[7] இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia