பூட்டான் சுதந்திரம்![]() பூட்டான் (Bhutan) வரலாற்றில் பெரும்பகுதி முழுவதும் சுதந்திரமாக இருந்த சில நாடுகளில் ஒன்றாகும். பூட்டான் சுதந்திரம்பூட்டானின் பெரும்பகுதி எப்பொழுதும் பிறிதொரு வெளிப்புற சக்தியால் கைப்பற்றப்படவோ, ஆக்கிரமிக்கப்படவோ அல்லது நிர்வகிக்கப்படவோ இல்லை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. காமரூப இராச்சியம் (Kamarupa Kingdom) அல்லது திபெத்திய (Tibetan Empire) சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆளப்பட்டதாக ஊகிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான சூழ்நிலை ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. அப்பெருமை மிக்க வரலாற்றைக் கொண்ட அந்த நாடு முழுவதும் தொடர்ந்து அதன் இறையாண்மையை பாதுகாத்து வருகிறது. [1][2] சுதந்திர தினம் இல்லாத நாடு![]() இந்நாடு இதுவரை யாருடைய ஆட்சியின் கீழும் இல்லாமையால், பூட்டானில் சுதந்திர தினம் இல்லை. இருப்பினும், 1910 ஆம் ஆண்டில் புனாகா (Treaty of Punakha) ஒப்பந்தத்தின் கீழ், பூட்டான் அரசியல் சுயாட்சிக்காக ஆங்கில அரசாங்கத்தின் மேலாதிக்கத்தை அங்கீகரித்தது. இந்தியா பூட்டான் உறவு1949 இல், பூட்டான் இந்தியாவின் நட்பு உடன்படிக்கை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அதன்படி பூட்டானுக்கு இந்தியா வெளியுறவு கொள்கையில் வழிகாட்ட அனுமதித்தது. [3] இந்த ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நீக்கப்பட்டது. [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia