பூதநீலகண்டர் கோயில்
பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple); (நேபாளி: बुढानिलकण्ठ मन्दिर (மொழிபெயர்ப்பு: (தொன்மையான நீலநிறத் தொண்டை), நேபாளத்தின் மாநில எண் 3ல், காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் எனுமூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். பூதநீலகண்டர் கோயில், காத்மாண்டு சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் உள்ளது.[1] பூதநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும்.[2] மூலவர்கோயில் மூலவரான பூதாநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச் சிலை ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட பூதாநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே, ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia