பூதபாலங்கா ஆறு
பூதபாலங்கா ஆறு (ஒடியா: ବୁଢାବଳଙ୍ଗ ନଦୀ) இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்சு மற்றும் பாலேசுவர் மாவட்டங்கள் வழியாகப் பாய்கின்ற ஆறு ஆகும். இது பாலங்கா ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. ஆற்றோட்டம்பூதபாலங்கா என்பது பழைய பாலாங்கா என்பதாகும். இந்த ஆறு சிமிலிபால் மலையில் தோன்றி பரேகிபனி அருவியாக விழுந்து பாய்கின்றது. பரேகிபனி அருவி இந்தியாவின் இரண்டாவது உயரமான அருவியாகும். இது சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி காரன்சியாபால் கிராமம் வரை ஓடி, தென்கிழக்காகத் திரும்பி ஜான்காபஹதி கிராம வரை தொடருந்து பாதைக்கு இணையாகச் செல்கிறது. பின் தன் பாதையை மாற்றி தெற்கு நோக்கிச் சென்று கத்ரா நாளாவினை சந்திக்கின்றது. சிமிலிபால் மலையில் உருவாகும் இரு நதிகள், பால்பலா மற்றும் சிப்பாட் இதன் கிளை நதிகளாகும். பாரிபடா வழியாகப் பாயும் இந்த ஆறு பாலாசோர் மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது.[1] ஆற்று தரவுபூதபாலங்கா ஆறு சுமார் 175 கிலோமீட்டர்கள் (109 mi) நீளம் மற்றும் மொத்த நீர்ப்பிடிப்பு பரப்பளவு 4,840 சதுர கிலோமீட்டர்கள் (1,870 sq mi). இதன் முக்கிய துணை நதிகள் சோன், கங்காதர் மற்றும் கேட்ரா ஆகும். [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia