பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை,இந்தியாவின் வங்காள விரிகுடாவில் பூம்புகார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கையான மற்றும் பழமையான கடற்கரை ஆகும். இக்கடற்கரை காவேரி ஆற்றில் இருந்து தொடங்கி வடக்கே நெய்தவாசல் வரை 3 கி.மீ. நீண்டு செல்கிறது.இந்த கடற்கரையின் மணல் 3 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து உள்ளது. சமீபத்தில் கடலரிப்பை தடுக்க கரையோரத்தில் கிரானைட் கற்களைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த கடற்கரை மற்றும் பூம்புகார் நகரம் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்மாதம் சித்திரையில் வரும் முழு நிலவு அன்று கொண்டாடப்படும் சித்ரா பவுர்ணமி இக்கடற்கரைக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.மேலும் தமிழ் மாதங்களான தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசையில் காவேரி ஆற்றின் முகத்துவாரங்களில் மக்கள் புனித நீராடி மகிழ்கின்றனர். இந்த கடற்கரையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை இக்கடற்கரையின் அருகில் உள்ள நகரமாகும்.

[1]

  1. https://en.wikipedia.org/wiki/Poompuhar_beach
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya